Aug 19, 2025 - 01:16 PM -
0
SLT-MOBITEL மற்றும் Hestia Engineering (Pvt) Ltd இடையே முக்கியத்துவம் வாய்ந்த உடன்படிக்கை அண்மையில் கைச்சாத்தாகியிருந்தது. அதனூடாக இல. 04, விண்ட்சர் அவினியு, தெஹிவளை எனும் முகவரியில் அமைந்துள்ள Windsta City Apartments க்கு அடுத்த தலைமுறை fibre வசதியை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனூடாக இந்த தொடர்மனையில் வசிப்போருக்கு உயர் வினைத்திறன் வாய்ந்த டிஜிட்டல் வாழ்க்கைமுறையை ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளது.
இந்த உடன்படிக்கையில் SLT இன் நுகர்வோர் வணிக ஆதரவு பொது முகாமையாளர் சுகத் ஆர். டி சில்வா மற்றும் Hestia Engineering (Pvt) Ltd இன் பணிப்பாளரிடையே கைச்சாத்திடப்பட்டது. இந்நிகழ்வில் இரு நிறுவனங்களினதும் இதர அதிகாரிகளும் பங்கேற்றனர். fibre தொழினுட்பத்தின் மூலோபாய நிறுவுகையினூடாக, வசிப்போருக்கு நவீன இணைப்புத்திறன் வசதியை ஏற்படுத்தி, முழுமையாக ஒன்றிணைக்கப்பட்ட டிஜிட்டல் இல்லங்களினூடாக, களிப்பூட்டும் அம்சங்கள், கல்வி மற்றும் வீட்டிலிருந்து பணியாற்றும் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு வலுவூட்டும் SLT-MOBITEL’இன் தொடர்ச்சியான நடவடிக்கை மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பங்காண்மையின் கீழ், Windsta City ஐச் சேர்ந்த 10 வசிப்போருக்கும், நவீன fibre உட்கட்டமைப்பு வசதியை SLT-MOBITEL வழங்கி, அதிவேக இணையம், தெளிவான குரல் தீர்வுகள் மற்றும் PEO TV ஊடாக high-definition களிப்பூட்டும் அம்சங்களை வழங்கி, நவீன குடும்பங்களின் தேவைகளை நிவர்த்தி செய்ய பங்களிப்பு வழங்கப்படும்.
ஸ்மார்ட் வசிப்பு மற்றும் டிஜிட்டலினால் வலுவூட்டப்பட்ட சமூகங்கள் போன்றவற்றுக்கான இரு நிறுவனங்களின் பகிரப்பட்ட அர்ப்பணிப்பை இந்த உடன்படிக்கை வெளிப்படுத்தும். SLT-MOBITEL உடனான பங்காண்மையினூடாக, இன்றைய கால டிஜிட்டல் கேள்விகளுக்கு பொருத்தமான நன்கு இணைக்கப்பட்ட இல்லங்களை தயார்ப்படுத்தும் உறுதி மொழியை Hestia Engineering தொடர்ந்தும் நிறைவேற்றியுள்ளது.
தெஹிவளையில் வசிப்பதற்கு உகந்த சூழலில் அமைந்துள்ள Windsta City, சிறந்த கட்டடக்கலை அம்சங்களுடன், நவீன வசதிகளையும் கொண்டு, இல்லத்தின் உரிமையாளர்களுக்கு சௌகரியம், சொகுசு மற்றும் நிலைத்திருக்கும் பெறுமதியை சேர்த்துள்ளது. SLT-MOBITEL இன் டிஜிட்டல் அனுபவ தெரிவுகளுடன் சீராக பொருந்தும் வாழ்க்கைமுறை அம்சங்களை இந்த தொடர்மனைத் தொகுதி கொண்டுள்ளது.
மேலும், SLT-MOBITEL மற்றும் Hestia Engineering உடன் Windsta City மூன்றாவது இணைப்பை வெளிப்படுத்தியுள்ளதுடன், புத்தாக்கம் மற்றும் நம்பிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் உறுதியான பங்காண்மை ஏற்படுத்தப்பட்டுள்ளது.