வடக்கு
யாழில் பெருமளவான துப்பாக்கி ரவைகள் மீட்பு

Aug 19, 2025 - 05:04 PM -

0

யாழில் பெருமளவான துப்பாக்கி ரவைகள் மீட்பு

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இன்று (19) நீர் குழாய்களை மண்ணில் புதைக்கும் பணிகளுக்காக நிலத்தினை அகழ்ந்து போது ஒரு தொகை துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.

 

குழாய்களை புதைப்பதற்காக நிலத்தினை அகழ்ந்து போது சந்தேகத்திற்கு இடமான முறையில் உரை பை ஒன்று காணப்பட்டதை அடுத்து, கொடிகாமம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

 

தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த உரை பையை மீட்டு சோதனையிட்ட போது அவற்றுக்குள் வெடிக்காத நிலையில் துப்பாக்கி ரவை கோர்வைகள் காணப்பட்டுள்ளன.

 

அதனை அடுத்து அவற்றை மீட்டு கொடிகாமம் பொலிஸ் நிலையம் எடுத்து சென்ற பொலிஸார் அவற்றுள் 1,393 துப்பாக்கி ரவைகள் காணப்பட்டதாகவும், அவற்றினை நீதிமன்றில் பரப்படுத்தி நீதிமன்ற உத்தரவில் அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக தெரிவித்தனர். 

--

Comments
0

MOST READ
01
02
03
04
05