Aug 19, 2025 - 07:47 PM -
0
ஆசிய கிண்ணத் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சூரிய குமார் யாதவ், தலைமையிலான இந்திய குழாம் இன்று (19) இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினால் அறிவிக்கப்பட்டது.
அதற்கமைய, இந்திய இருபதுக்கு 20 அணிக்கு சுப்மன் கில் மீண்டும் திரும்பியுள்ளார்.
அவர் ஆசிய கிண்ணத் தொடரில் துணைத் தலைவராக செயற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பணிச்சுமை காரணமாக அண்மையில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகிய ஜஸ்பிரிட் பும்ரா இணைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, இந்த குழாமில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை.
இன்று அறிவிக்கப்பட்ட ஆசிய கிண்ணத்திற்கான இந்திய குழாம் 1 Suryakumar Yadav (capt), 2 Shubman Gill(vc), 3 Hardik Pandya, 4 Arshdeep Singh, 5 Abhishek Sharma, 6 Tilak Varma, 7 Shivam Dube, 8 Axar Patel, 9 Jitesh Sharma, 10 Jasprit Bumrah, 11 Varun Chakravarthy, 12 Kuldeep Yadav, 13 Harshit Rana, 14 Rinku Singh, 15 Sanju Samson