Aug 20, 2025 - 06:00 AM -
0
இன்று (20) சுபமுகூர்த்த நேரம் நிறைந்த நன்னாளில், சந்திர பகவான் மிதுன ராசியில் புனர்பூசம் நட்சத்திரத்தில் வந்திருக்கிறார். இன்று உருவாகும் கஜகேசரி யோகத்தால் நன்மைகள் அதிகரிக்கும். இன்று விருச்சிக ராசிக்கு சந்திராஷ்டமம். விநாயகரை வழிபட்டு எந்த செயலையும் தொடங்கவும்.
மேஷம் ராசி பலன்
மேஷ ராசிக்கு சிறந்த நாளாக இருக்கும். வாழ்க்கையில் மறக்க முடியாத சில நல்ல விஷயங்கள் நடக்கும். நீண்ட நாட்களாக நிறைவேறாத ஆசைகள் நிறைவேறலாம். உங்கள் ஆரோக்கியம் மேம்படும். அதனால் வேலைகளை சாதகமாக செய்து முடிக்க முடியும். வேலை திட்டங்களை மும்முரமாக முடிப்பீர்கள். மாணவர்கள் படிப்பில் சிறப்பாக செயல்படுவார்கள். சமூகப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். காதல் வாழ்க்கையில் ரகசியங்களை வெளிப்படுத்த வேண்டாம். இன்று உங்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷப ராசிக்கு இன்று தொந்தரவுகள் நிறைந்த நாளாக இருக்கும். உங்கள் வேலையில் சில சிக்கல்களை சந்திக்க வாய்ப்பு உண்டு. நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் அனுசரித்து செல்லவும். அன்பு கூறியவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளவும் உங்கள் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிக்கவும். வேலை தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்கும். இன்று உங்களின் வேலை, வியாபாரம் தொடர்பாக கடின உழைப்பு மட்டுமே எதிர்பார்த்த பலன் கிடைக்கும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் ஆலோசனை உங்களுக்கு உதவும்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசிக்கு மிகவும் நல்ல நாளாக இருக்கும். வேலை தொடர்பாக வெற்றியை எதிர்பார்க்கலாம். சரியான நேரத்தில் வேலையை முடிக்க முடியும். இன்று உங்கள் ஆரோக்கியத்தை கவனம் செலுத்த வேண்டிய நாள். இன்று உங்களை சுற்றி சில நல்ல அழகான விஷயங்கள் நடக்கும். புத்துணர்ச்சியாகச் செயல்படுகிறது. உங்கள் வேலையை சரியான திட்டமிடலுடன் செய்யவும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட முயற்சி செய்யவும். இன்று மனதளவில் நன்றாக உணருவீர்கள்.
கடகம் ராசி பலன்
கடக ராசிக்கு கடினமான நாளாக இருக்கும். உங்களுக்கு வியாபாரம், வேலைகளை செய்து முடிப்பதில் சோர்வு அடைவீர்கள். இன்று நீங்கள் நினைத்த விஷயங்கள் சரியாக நடக்காததால் ஏமாற்றம் அடைவீர்கள். உங்கள் வாழ்க்கையில் புதிய அனுபவத்தைப் பெறுவீர்கள். இன்று நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். சமூக நடவடிக்கைகளில் ஈடுபாடு அதிகரிக்கும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நேர்மறையான எண்ணத்துடன் செயல்பட வேண்டிய நாள்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசிக்கு சரியான பலன்கள் கிடைக்கக்கூடிய நாள். உங்கள் இலக்குகளை அடைவதில் சிரமங்களைச் சந்திக்க நேரிடும். இன்று உங்களுக்கு கடின உழைப்பு மற்றும் பொறுமை தேவைப்படும் நாள். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் ஆலோசனை பெறுவீர்கள். இன்று எந்த ஒரு வாக்குவாதத்திலிருந்து விலகி இருப்பது நல்லது. உங்களின் வாய்ப்பு மற்றும் வசதிகள் அதிகரிக்கும். பண விஷயத்தில் கவனம் தேவை. செலவுகளை கட்டுப்படுத்தினால் உங்களின் நிதிநிலை மேம்படுத்த முடியும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசிக்கு சிறந்த நாளாக இருக்கும். உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத சில நல்ல நிகழ்வுகள் நடக்கும். உங்களை சுற்றி உள்ள சூழல் சிறப்பானதாகவும், மகிழ்ச்சியான அலை வீசும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். இன்று நீங்கள் மனதளவில் பாதுகாப்பாக உணர்வீர்கள். வேலை தொடர்பாக மும்முரமாகச் செயல்படுவீர்கள். என்ற பணியிடத்தில் நல்ல அனுபவம் கிடைக்கும். திட்டமிட்ட பணிகளில் எதிர்பார்த்த பலனை தரும். இன்று மாணவர்கள் படிப்பின் கூடுதல் கவனம் தேவைப்படும். சமூக நடவடிக்கைகளில் மரியாதை அதிகரிக்கும்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசிக்கு இன்று வேலையில் வெற்றி கிடைக்கும். கடின உழைப்பிற்கான பலனை பெறுவீர்கள். எதிரிகளிடம் இருந்து விலகி இருப்பது நல்லது. உங்கள் எண்ணங்களை கவனமாக, நேர்மறையாகவும் வைத்திருப்பது நல்லது. இன்று எல்லா விஷயத்திற்கும் எதிர்வினை ஆற்றுவதை தவிர்க்கவும். கோபத்தை கட்டுப்படுத்துவது அவசியம். தேவையற்ற செலவுகளால், பணப்பற்றாக்குறை ஏற்படும். இன்று மன ஆரோக்கியத்தை காக்க வேண்டிய நாள். பொழுதுபோக்கு விஷயங்களை அதிக நேரம் செலவிடுவார்கள். நேரத்தை பயனுள்ள விஷயங்களில் செயல்பட முயலவும்.
விருச்சிகம் ராசி பலன்
இன்று உங்களுக்கு கடினமான நாளாக இருக்கும். அன்றாட வேலைகளை முடிப்பதில் திட்டமிடலும் கவனமும் தேவை. உங்கள் உடல் நலம் பிரச்சனை தரக்கூடியதாக இருக்கும். உறவினர்களிடமிருந்து சிறப்பு பரிசுகள் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் அன்பு நிறைந்திருக்கும். வேலை தொடர்பாக மும்முரமாகச் செயல்படுவீர்கள். அரசு வேலைக்கு தயாராகக்கூடிய நபர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். உங்கள் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள். காதல் விஷயத்தில் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசிக்கு கலவையான பலன்கள் கிடைக்கும். உங்கள் தொழில் தொடர்பாக கவனத்துடன் முடிவு எடுக்கவும். வேலையை முடிப்பதில் கடின உழைப்பு தேவைப்படும். இன்று எந்த ஒரு முதலீடு செய்வதற்கு முன் நிதி வல்லுநர்களிடம் ஆலோசனை பெறுவது நல்லது. நீதிமன்ற வழக்கு விஷயங்களில், உங்கள் உரிமைக்காக போராட வேண்டியது இருக்கும். இருக்கும் உங்கள் மனதில் காதல் பூக்கும். உடல் நலம் தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. இன்று உங்கள் செயல்பாடுகளுக்கு குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். உணவு பழக்க வழக்கத்தை பராமரிக்க வேண்டிய நாள்.
மகர ராசி பலன்
மகர ராசிக்கு மிகவும் அற்புதமான நாளாக அமையும். உங்கள் வேலையில் வெற்றி பெறுவீர்கள். நீண்ட நாள் கனவு நிறைவேற வாய்ப்பு உண்டு. தொழில் தொடர்பான விஷயங்களில் சில நல்ல வாய்ப்புகள், சொந்தங்கள் கிடைக்கும். வீட்டில் மங்களகரமான நிகழ்வுகள் நடக்கும். இன்று உங்களின் வேலைகளை முடிக்க கடின உழைப்பு தேவைப்படும். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். உடல் நலத்தை கவனித்துக் கொள்ள வேண்டிய நாள். சரியான உடற்பயிற்சி மற்றும் உணவுகளை எடுத்துக் கொள்ளவும். இன்று உங்களின் வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசிக்கு நல்ல நாளாக இருக்கும். நிறைய லாபம் கிடைக்கக்கூடிய நாள். உங்களின் வேலை மற்றும் வியாபாரம் தொடர்பாக நேற்று முன், வரவு அதிகரிக்க கூடிய நாளாக இருக்கும். இன்று உங்கள் பேச்சை கட்டுப்படுத்த வேண்டிய நாள். அலுவலகத்தில் உள்ள அரசியலில் இருந்து விலகி இருப்பது நல்லது. உங்கள் அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிட முயற்சி செய்யவும். இன்று பொழுதுபோக்கு விஷயங்களுக்காக அதிகமாக பணத்தை செலவிடுவீர்கள், வண்டி வாகனம் வாங்குதல், வீட்டின் தேவைகளை நிறைவேற்றச் செலவு அதிகரிக்கும். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியாக வைத்திருக்க முயல்வீர்கள். இன்று பண பற்றாக்குறை எதுவும் இருக்காது.
மீனம் ராசி பலன்
மீன ராசிக்கு கடினமான நாளாக இருக்கும். அன்றாட வேலைகளில் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். அதனால் சரியான திட்டமிடல் மற்றும் புத்துணர்ச்சியுடன் உங்கள் வேலைகளை அணுகவும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள். உங்கள் உறவினர்களிடமிருந்து பரிசுகள் கிடைக்க வாய்ப்பு உண்டு. வீட்டில் மகிழ்ச்சியும், உற்சாகமும் நிறைந்திருக்கும். திருமண வாழ்க்கையில் துணையுடன் நேரத்தை செலவிட, உங்கள் அன்பை பரிமாறிக் கொள்ள வாய்ப்பு உண்டு. இன்று நீண்ட நாட்கள் எதிர்பார்த்த சில நல்ல செய்திகள் கிடைக்கும்.