Aug 20, 2025 - 06:48 AM -
0
அமெரிக்காவில் குடியேற்றவிதிகளை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கடுமையாக்கி வருகிறார். சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்தி வருகிறார். மேலும் போராட்டம் உள்பட பல்வேறு காரணங்களால் வெளிநாட்டு மாணவர்களின் விசாவும் ரத்து செய்யப்படுகிறது.
இந்நிலையில், பயங்கரவாதத்தை ஆதரித்ததாக கூறி, 6,000+ வெளிநாட்டு மாணவர்களின் விசாக்களை அமெரிக்க வெளியுறவுத்துறை ரத்து செய்துள்ளது.
மதுபோதையில் வாகனம் ஓட்டுதல், குற்றச்செயல்கள், பயங்கரவாதத்துக்கு ஆதரவாக செயல்படுதல் போன்ற சட்ட விதிமீறலுக்காகவும், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய சில மாணவர்களை குறிவைத்தும் ட்ரம்ப் நிர்வாகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.