Aug 20, 2025 - 07:03 AM -
0
நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 18 ஆண்டுக்கு பிறகு முதல் முறையாகக் கிண்ணத்தை வென்றது.
ஆர்சிபி அணி 18 ஆண்டுகள் கழித்து ஐபிஎல் கிண்ணத்தை வென்றது தொடர்பாக ஆதரவான கருத்துகளும், எதிர் கருத்துகளும் அவ்வப்போது வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரரான அம்பதி ராயுடு தனியார் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் அளித்த பேட்டியில் கூறியதாவது,
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 18 ஆண்டுகளில் ஒரு ஐ.பி.எல். கிண்ணத்தை வென்றுள்ளது என்றால், 5 கிண்ணங்களை வெல்ல அவர்களுக்கு 72 ஆண்டுகள் ஆகும்.
ஐ.பி.எல். கிண்ணத்தை வெல்வது எவ்வளவு கடினம் என்று இப்போது அவர்களுக்குப் புரிந்திருக்கும். 5 கிண்ணத்தை வெல்வது எவ்வளவு கடினம் என்பதை கற்பனை செய்து பாருங்கள் என தெரிவித்தார்.