Aug 20, 2025 - 11:25 AM -
0
மேற்கு ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 73 பேர் உயிரிழந்தனர்.
அவர்களில் 17 சிறுவர்களும் அடங்குவதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரானில் இருந்து நாடு கடத்தப்பட்ட ஆப்கானிய அகதிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றே விபத்துக்குள்ளானதாக தலிபான் அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி பிபிசி செய்தி வௌியிட்டுள்ளது.
காபூலுக்குச் சென்று கொண்டிருந்த பேருந்து, ஹெராத் மாகாணத்தில் ஒரு லொறி மற்றும் மோட்டார் சைக்கிள் மீது மோதி தீப்பற்றுதலுக்கு உள்ளானதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
பேருந்தில் இருந்த அனைவரும் உயிரிழந்ததாகவும், விபத்துக்குள்ளான ஏனைய வாகனங்களில் பயணித்த இருவரும் சம்பவத்தில் உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
உள்நாட்டு மோதல் காரணமாக தாய் நாட்டில் இருந்து தப்பிச் சென்ற ஆவணமற்ற ஆப்கானிய குடியேறிகளை நாடு கடத்துவதை ஈரான் முடுக்கிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.