Aug 20, 2025 - 12:49 PM -
0
இஸ்ரேல் இராணுவத்தின் காசா நகரத் தாக்குதல் திட்டங்களுக்கு அந்த நாட்டு பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் ( Katz) அனுமதி வழங்கியுள்ளார்.
இந்த திட்டத்திற்கான அனுமதி கோரி, நேற்று (19) ஐ.டி.எப் தலைமை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் இயல் ஜமீர் மற்றும் ஏனைய சிரேஸ்ட அதிகாரிகள் அவருக்கு வழங்கியிருந்தனர்.
காசாவை முழுமையாக கைப்பற்றுவதற்கும், ஹமாஸ் மீதான தாக்குதல்களை அதிகரிக்கவும் அரசாங்கம் முன்னதாக அறிவுறுத்தியது.
இதற்கமைவான இராணுவத்தினரின் முழுமையான திட்டம் தொடர்பில் நடைபெற்ற கலந்துரையாடலில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
பின்னர், இந்த திட்டத்திற்கு Gideon’s Chariots B என பெயரிட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனை இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் பாராட்டியதாகவும் இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
எவ்வாறாயினும் இஸ்ரேலின் இந்த முடிவுக்கு பல்வேறு நாடுகள் தமது கண்டனங்களை வௌிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.