Aug 20, 2025 - 01:34 PM -
0
அவுஸ்திரேலியாவின் டீக்கின் பல்கலைக்கழகத்தால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் நிகழ்வான Deakin Week Sri Lanka 2025, அண்மையில் (ஆகஸ்ட் 19 முதல் 21 வரை) சிறப்பாக நிறைவடைந்தது. இந் நிகழ்வில் 300 இற்கும் மேற்பட்ட கல்வி, தொழில்துறை மற்றும் அரசாங்கத் தலைவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இந் நிகழ்வு, டீக்கின் நிறுவனத்தை இலங்கையில் ஒரு சிந்தனைத் தலைவராக நிலைநிறுத்துவதற்கும், தொழில்துறை இணைவுகளை வலுப்படுத்துவதற்கும், பல்கலைக்கழகத்தின் கல்விச் சிறப்பு, ஆராய்ச்சி கண்டுபிடிப்பு மற்றும் நாட்டின் கல்வி முன்னேற்றத்திற்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதற்கும் ஒரு மூலோபாய தளமாகச் செயல்பட்டது.
Deakin Week Sri Lanka 2025இன் போது, கல்வியாளர்கள் மற்றும் கல்வி வல்லுநர்கள், பாடசாலை நிர்வாகிகள், தொழில்துறை தலைவர்கள் மற்றும் நிறுவனப் பிரதிநிதிகள், நிறுவனப் பங்காளர்கள் மற்றும் வருங்கால மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் ஈர்க்கும் பல முக்கிய செயல்பாடுகள் நடைபெற்றன.
ஆகஸ்ட் 19, 2025 அன்று தொடக்க விழாவுடன் ஆரம்பமான இவ் வாரத்தில் அவுஸ்திரேலியாவின் டீக்கின் பல்கலைக்கழகம் மற்றும் இலங்கையின் பங்காளர் நிறுவனங்களின் சிரேஷ்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டு பத்தாண்டுகளின் வெற்றிகரமான இணைவு மற்றும் புதுமையைக் கொண்டாடினர்.
மேலும், இந் நிகழ்வின் சிறப்பிற்கு ஆற்றல்மிக்க பேச்சாளர்கள் பங்களித்தனர். Deakin Internationalஇன் பிரதி துணைவேந்தரும் துணைத் தலைவருமான (சர்வதேச) ஜோன் மொலொனி, Sri Lanka Institute of Information Technologyஇன் கணினி பீடத்தின் பிரதி துணைவேந்தர் பேராசிரியர் நுவன் கொடகொட மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் குறித்த இலங்கை ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் Dr.ஹான்ஸ் விஜயசூரிய ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இவ் வாரத்தின் சிறப்பம்சமாக, டீக்கின் பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்பப் பாடசாலையின் Applied AIஇன் சிரேஷ்ட விரிவுரையாளரும், முதுகலை Applied AIஇன் பாடநெறி இயக்குனருமான Dr.பஹரே நகிசாவால் நடாத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு குறித்த அமர்வு நிகழ்ந்தது. இந்த அமர்வு, பல்வேறு துறைகளில் AI தொழில்நுட்பம் மற்றும் அதன் பயன்பாட்டின் சமீபத்திய முன்னேற்றங்கள் பற்றிய அறிவை வழங்கியது. மேலும், இந் நிகழ்வில் எதிர்காலத்திற்கான தயார்நிலை: நாளைய சவால்களுக்கான தொழில்நுட்பத்தை தழுவுதல் என்ற தலைப்பில் செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் மாற்றம் மற்றும் கல்வி சீர்திருத்தம் தொடர்பான கருத்துக்களை ஆராய்ந்த ஒரு சிந்தனைத் தலைமைத்துவக் குழுவின் கலந்துரையாடல் அமர்வும் இடம்பெற்றது.
வாரம் முழுவதும் வேலைவாய்ப்பு போக்குகள், பட்டமளிப்பிற்கு பின்னரான நிலை மற்றும் தொழில்துறையின் வளர்ந்து வரும் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக இடம்பெற்ற பல்வேறு கலந்துரையாடல்கள் ஊடாக கல்வி நிறுவனங்கள் மற்றும் பணியமர்த்துவோர் ஆழமான புரிதலை பெற்றுக் கொண்டனர். தாதியியல், AI, உயிரி மருத்துவம் (Biomedicine), உளவியல், ஆரம்ப குழந்தைப் பருவக் கல்வி மற்றும் வணிகம் உள்ளிட்ட பல துறைகளில் நிபுணர்கள் தலைமையில் இடம்பெற்ற கல்வி மற்றும் தொழில்துறை சார்ந்த அமர்வுகள் மற்றும் கலந்துரையாடல்கள் ஊடாக முக்கிய தொழில்முறைகள் உள்ளடக்கப்படுவது உறுதி செய்யப்பட்டது.
இந் நிகழ்வில் கலந்து கொண்ட பல்வேறு தரப்பினருக்கு ஏற்றவாறு பட்டறைகள் நடைபெற்றன. இந்த அமர்வுகள் தொழில்முறை வளர்ச்சியை ஊக்குவித்ததுடன் பல்வேறு பின்னணிகள் மற்றும் நிபுணத்துவ நிலைகளை சேர்ந்த பங்கேற்பாளர்களிடையே அறிவுப் பரிமாற்றத்தை எளிதாக்கின.
இவ் வாரம், தொடர்பான தரப்பினருக்கு டீக்கின் ஆசிரிய உறுப்பினர்கள், மதிப்புமிக்க முன்னாள் மாணவர்கள் மற்றும் முன்னணி தொழில் வல்லுநர்களுடன் தொடர்புகளை உருவாக்க வாய்ப்பை வழங்கியது. இத் தொடர்புகள் ஏற்கனவே உள்ள இணைவுகளை வலுப்படுத்தவும், புதிய இணைவுகளை உருவாக்கி அவுஸ்திரேலிய மற்றும் இலங்கைக் கல்வி மற்றும் வணிக சமூகங்கள் பயன் பெற உதவும்.
Deakin Week Sri Lanka 2025 பற்றிய மேலதிக தகவலுக்கு, www.deakin.edu.au/srilanka ஐப் பார்வையிடவும் அல்லது +94 74 028 6605 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளவும்.