Aug 20, 2025 - 02:26 PM -
0
இலங்கை கிரிக்கெட் சபையினால் பாடசாலைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (20) நாடளாவிய ரீதியில் இடம்பெற்றது.
அந்த வகையில் நுவரெலியா மாவட்டத்தில் ஹட்டன் கல்வி வலையத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கான உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு ஹட்டன் லாடம் மண்டபத்தில் சபையின் செயலாளர் ஆர்.பிரபகார் தலைமையில் இடம்பெற்றது.
243 பாடசாலைகளுக்கு இந்த விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் ஹட்டன் வலையகல்வி பணிமனையின் பணிப்பாளர் நாமல்சந்ரகுமார, நுவரெலியா மாவட்ட கிரிக்கெட் சபையின் செயலாளர் ஆர்.பிரபாகர், பொருளாளர் எஸ்.பி.நவரட்ணம், சிரேஸ்ட உபதலைவர்கள் மற்றும் பயிற்சியாளர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
--