வடக்கு
நெடுங்கேணி வீதிக்கரையில் இருந்து சடலம் மீட்பு!

Aug 20, 2025 - 03:43 PM -

0

நெடுங்கேணி வீதிக்கரையில் இருந்து சடலம் மீட்பு!

வவுனியா நெடுங்கேணி பகுதியில் முல்லைத்தீவு பிரதான வீதியில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் காயங்களுடன் நேற்று (19) இரவு மீட்கப்பட்டுள்ளது.

 

குறித்த நபர் அந்தபகுதியில் உள்ள மில் ஒன்றில் பணிபுரிந்து வருகின்றார். கடந்த 18 ஆம் திகதி இரவு அவர் பணிமுடிந்து வெளியில் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

இந்நிலையில் முல்லைத்தீவு பிரதானவீதியில் அமைந்துள்ள பாலத்தின் கரையில் அவரது சடலம் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது.

 

அவரது சடலதிற்கு அண்மையில் வாகனம் ஒன்றின் உதிரிப்பாகங்கள் உடைந்தநிலையில் காணப்படுகின்றது. அவரை வாகனம் ஒன்று மோதித்தள்ளிவிட்டு நிறுத்தாமல் சென்றுள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

 

சம்பவத்தில் கனகராயன்குளம் பெரியகுளத்தைச் சேர்ந்த ச.ரவிக்குமார் என்ற 45 வயதான குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.

 

சம்பவம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் நெடுங்கேணி பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
 

--

Comments
0

MOST READ
01
02
03
04
05