Aug 21, 2025 - 11:24 AM -
0
2025 ஆம் ஆண்டின் ஆசிய கிண்ணத்திற்கான உப தலைவர் பதவியில் இருந்து ஹர்திக் பாண்டியாவை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தெரிவுக்குழு நீக்கியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் நட்சத்திர வீரர் மதன் லால் தெரிவித்துள்ளார்.
சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய குழாமில் உப தலைவராக சுப்மன் கில் நியமிக்கப்பட்டார்.
அவர் விரைவில் அடுத்த இருபதுக்கு 20 தலைவராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.
2024 உலகக் கிண்ணத்தின் போது ஹர்திக் இருபதுக்கு 20 அணியின் உப தலைவராக செயற்பட்டிருந்தார்.
ஆனால் அதன் பின்னர், அக்ஸர் படேலுக்கு அந்தப் பதவி வழங்கப்பட்டது.
அதேநேரம், இந்த குழாமில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணைக்கப்படாமையும் கேள்வியை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அணிக்கு சிறந்த பங்களிப்பை அவர் வழங்குவதாக குறிப்பிட்டார்.
எனினும் அவருக்கு வாய்ப்பளிக்கப்படாமை வருத்தம் அளிப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மதன் லால் தெரிவித்துள்ளார்.