Aug 21, 2025 - 12:51 PM -
0
கண்டி எசல பெரஹெராவின் மாயாஜாலமும், ஆடம்பரமும் அண்மையில் செலிங்கோ லைஃப்பின் 120 சிறப்பு விருந்தினர்களுக்கு உயிர்ப்பான முறையில் வெளிப்படுத்தப்பட்டன. செலிங்கோ லைஃப் நிறுவனத்தின் வாடிக்கையாளர் உறவுகள் தொடர்ந்தும் பிரிவானது, ஒன்பதாவது தடவயாக இரண்டாவது ரந்தோலி பெரஹெராவினை கிங்ஸ் வீதி, இலக்கம். 65 இல்அமைந்துள்ள செலிங்கோ லைஃப் கண்டி கிளையிலிருந்து கண்டு களிக்கும் நிகழ்வை நடத்தியது.
செலிங்கோ லைஃப்பின் வாடிக்கையாளர் தொடர்புகளை மேலும் மேம்படுத்த ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாலை நிகழ்வானது, நிறுவனத்தின் மிகவும் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களைப் பாராட்டுவதற்கும் அவர்களுடனான உறவுகளை வலுப்படுத்துவதற்கும் அர்ப்பணிக்கப்பட்டது. செலிங்கோ லைஃப் காப்புறுதிதாரர்களின் பிரீமியம் கிளப்பின் பிளாட்டினம் கிளப் உறுப்பினர்கள் இதில் அடங்குவர்.
பெரஹெராவின் சிறப்பை அருகிலேயே கண்டு களிக்கும் வகையில், பிரத்தியேக இடத்தில் விஐபி-கள் அமர வைக்கப்பட்டிருந்ததால், விருந்தினர்கள் ஒப்பற்ற அனுபவத்தை அனுபவித்தனர். இந்த கலாசார நிகழ்வானது மதிப்புமிக்க அமயா ஹில்ஸ் ரிஸோர்ட்டின் மாலை சிற்றுண்டி மற்றும் பிரத்தியேக இரவு உணவு பஃபே உள்ளிட்ட சிறந்த உணவு அனுபவத்தால் இனிதே நிறைவுற்றது. குழந்தைகளுக்கான தனியார் திரைப்படம், நினைவுப் பொருட்களாக அழகாக வடிவமைக்கப்பட்ட குடும்ப புகைப்படங்கள் மற்றும் சிறப்பு நாள் நிகழ்வு திகதியில் பிறந்திருந்த இரண்டு காப்புறுதிதாரர்களுக்கான பிறந்தநாள் கொண்டாட்டங்கள் உள்ளிட்ட பல ஞாபகார்த்த தருணங்களை குடும்பங்கள் அனுபவித்தன.
கலாசாரம், ஒய்வு மற்றும் கொண்டாட்டம் நிறைந்த இந்த மாலைப் பொழுதானது, வர்த்தகத்திற்கு அப்பாற்பட்ட உறவு சார்ந்த அனுபவங்களை வழங்குவதற்கும், அதன் உயர் ரக வாடிக்கையாளர்களுக்கு நீடித்த நினைவுகளை உருவாக்குவதற்குமான செலிங்கோ லைஃப்பின் ஆழ்ந்த அர்ப்பணிப்பை பிரதிபலிப்பதாக அமைந்திருந்தது.