Aug 21, 2025 - 01:07 PM -
0
செலான் வங்கி அண்மையில் பல்வேறு பிராந்திய அபிவிருத்தி மன்றங்கள் மற்றும் நிகழ்ச்சித்திட்டங்கள் ஊடாக நாட்டின் சிறு மற்றும் நடுத்தர வியாபார (SME) தொழில் முயற்சியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் தனது முயற்சிகளுக்கு மேலும் வலுவூட்டியது. நிதிசார் அறிவை மேம்படுத்துதல் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவித்தல் மற்றும் SME களின் இயலுமையை பலப்படுத்தல் என்பவற்றை நோக்கமாகக் கொண்ட இந்த முன்னெடுப்பானது இலங்கையின் பொருளாதாரத்தின் அடிக்கல்லாக விளங்கும் SME துறையை வலுவூட்டும் வங்கியின் நோக்கத்தைத் தொடர்ந்தும் செயல்படுத்துகிறது.
ஸ்திரமான ஒரு SME துறையை உருவாக்க வேண்டுமென்ற நோக்கத்தைக் கொண்டுள்ள அநேகமான நிறுவனங்களுடன் செலான் வங்கி இணைந்து செயற்படுகிறது. இலங்கை வர்த்தக சம்மேளனத்துடன் இணைந்து கொழும்பில் ஒழுங்கமைக்கப்பட்ட 'Scale Up' நிகழ்ச்சித்திட்டம் இதன் ஆரம்பமாக அமைந்ததோடுரூபவ் இந்த நிகழ்வின் வெள்ளி அனுசரணையாளராக செலான் வங்கி பங்குபற்றியது. இந்த நிகழ்ச்சித்திட்டமானது டிஜிட்டல் வழிமுறைகளைப் பயன்படுத்தி சந்தை அணுகலை மேம்படுத்துவதற்கான நிதிசார் தீர்வுகள் மற்றும் மூலோபாயங்கள் பற்றிய உள்விடயங்களை பெற்றுத்தந்தது.
இந்த நிகழ்வின் அடுத்த அத்தியாயம் மாத்தறையில் நடைபெற்றதோடு குறித்த நிகழ்ச்சித்திட்டம் ஏற்றுமதி செயன்முறை குறித்த ஒரு விழிப்புணர்வு கருத்தரங்காக அமைந்தது. செலான் வங்கி ஏற்றுமதி அபிவிருத்தி சபையுடன் (EDB) இணைந்து அதனை முன்னெடுத்திருந்தது. முன்னெடுப்பின் நோக்கத்திற்கு அமைவாக நாட்டின் தென்பகுதி SME கள் ஏற்றுமதி தயார்நிலையை கருத்திற்கொண்டு எவ்வாறு தமது செயற்திட்டங்களை மாற்றியமைக்கலாம் என்பது பற்றி இதன்போது விளக்கமளிக்கப்பட்டது. இந்த அமர்வினை EDB வழிநடத்தியதோடு சர்வதேச வர்த்தக செயன்முறைகளை மன்றம் ஆய்வு செய்திருந்தது.
SME துறையின் ஒரு முக்கிய பிரிவாக பெண் தொழில் முயற்சியாளர்கள் தமது வணிக ஆற்றலை எவ்வாறு விரிவாக்கலாம் என்றும் இந்த முன்னெடுப்பு ஆராய்ந்தது. கம்பஹாவில் நடைபெற்ற பெண்களுக்கான நிதி முகாமைத்துவ நிகழ்ச்சித்திட்டத்தில் பெண் தொழில் முயற்சியாளர்கள் நிலைபேறான வணிக வடிவங்களைத் தொடர்ந்து பின்பற்றுவதற்காக முக்கிய நிதி முகாமைத்துவக் கருவிகளுடன் தங்களைத் தயார்படுத்திக் கொள்வதற்கான பல்வேறு வழிமுறைகளும் ஆராயப்பட்டன.
வடமத்தியப் பிராந்தியத்தின் ‘SME நிகழ்ச்சித்திட்டம் 2025' இவ்வாறான விரிவான ஓர் அமர்வை நடாத்தியது. அங்குள்ள தொழில் முயற்சியாளர்களின் பிராந்திய ரீதியிலான குறித்த தேவைகளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட இந்த நிகழ்ச்சித் திட்டமானதுரூபவ் தொழில் முயற்சியாளர்கள் தங்களுக்கான சூழ்நிலைகளில் வணிக வளர்ச்சியை எவ்வாறு சாத்தியமாக்கலாம் என்பது பற்றிய அறிவைப் பெற்றுத்தந்தது. காலியில் நடைபெற்ற 'தொழில் முயற்சியாளர்கள் நிகழ்ச்சித்திட்டம்' இந்த முன்னெடுப்பின் உத்வேகத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது எனலாம். ரோட்டரி கழகத்துடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த நிகழ்வானது தென் மாகாணத்தில் வளர்ந்து வரும் தொழில் முயற்சியாளர்களுக்கு பயிற்சி வழிகாட்டல் மற்றும் துறை சார்ந்தோரை தமக்குள் இணைக்கும் தனித்துவமான வாய்ப்புகளை வழங்கும் நாடளாவிய முயற்சியின் ஓர் அங்கமாகும்.
இந்த முன்னெடுப்பின் விருத்தி மற்றும் விளைவுகள் குறித்து செலான் வங்கியின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை உதவிப் பொது முகாமையாளர் ஆசிரி அபயரத்ன தெரிவிக்கும்போதுரூபவ் 'புதிய சாத்தியங்களுக்கான வழிகளைத் திறந்திடும் மகத்தான தீர்வுகளைப் பெற்றுத் தருவதே SME மன்றங்களை உருவாக்குவதற்கான எமது பங்காண்மைகள் மற்றும் இணைவாக்கங்களின் நோக்கமாகும். அவற்றின் ஊடாக உற்பத்தியை ஊக்குவிக்கும் சூழலை உருவாக்குதல் நிதிசார் அறிவை ஊக்குவிக்கும் அதேவேளை வளர்ந்து வரும் பொருளாதார அபிவிருத்திகளுக்கு எளிய தீர்வுகளைப் பெற்றுத்தருதல் ஆகிய எமது அடிப்படைப் பெறுமதிகளுக்கு வலுசேர்ப்பதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம். SME தொழிற்துறை இன்னும் பல வெற்றிகளைக் காணும் வரை இதனை தொடர்ந்தும் பலப்படுத்துவதே எமது நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்கமாகும்' என்று குறிப்பிட்டார்.