Aug 21, 2025 - 02:33 PM -
0
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்கள் வெளிவந்தால், அப்படங்கள் பல கோடி வசூல் என தயாரிப்பு நிறுவனங்களே அறிவிப்புகளை வெளியிடுகிறது.
அவற்றில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது தற்போது கேள்வியாக எழுந்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடித்து 2023ல் வெளிவந்த படம் 'லியோ'. அப்படம் 12 நாட்களில் 540 கோடி வசூலித்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்கள்.
ஓடி முடித்த போது 600 கோடி வசூலித்தது என்று சொல்லப்பட்டது.
இதனிடையே, தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்து வெளியான 'கூலி' படத்தின் வசூல் குறித்து விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.
அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக 'லியோ' படத்தின் உண்மை வசூல் என வருமான வரித் துறைக்கு அளித்த ஆவணங்களை சில ரஜினி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து பதிலடி கொடுத்துள்ளனர்.
'லியோ' படம் மூலம் பெற்ற வருவாய் 404 கோடி. அது ஒட்டுமொத்த வருவாய். அதில் ஓடிடி உரிமை 124 கோடி, செய்மதி உரிமை 72 கோடி, இசை உரிமை 24 கோடி, ஹிந்தி செய்மதி உரிமை 24 கோடி ஆகியவற்றை கழித்தால் தியேட்டர் வசூல் நிகர வருவாய் 160 கோடி. அதன் மொத்த வசூல் என்று பார்த்தால் 220 கோடி வரும். ஆக, அதுதான் படத்தின் உண்மையான வசூல் என்று ஒரு கணக்கைப் ரஜினி ரசிகர்கள் பகிர்ந்துள்ளனர்.
விஜய் நடித்த படங்களிலேயே 'லியோ' படம்தான் அதிக வசூலில் முதலிடத்தில் உள்ளது.
அந்த வசூலே பொய்க் கணக்கு என்றால் மற்ற படங்களின் வசூலில் உண்மைத் தன்மை எந்த அளவுக்கு இருக்கும் என்பது மிகப் பெரிய கேள்வி எனவும் ரசிகர்கள் கருத்து வௌியிட்டுள்ளனர்.