Aug 22, 2025 - 01:11 PM -
0
NDB வங்கியானது பாரம்பரிய வங்கித் துறைக்கு அப்பால் தனது வாடிக்கையாளர்களுக்கு முழுமையான பெறுமதியை வழங்குவதற்கான தனது உறுதிப்பாட்டைத் தொடர்ந்து, அண்மையில் உயர்ந்த நல்வாழ்வுக்கான ஆரோக்கியம் மற்றும் சமநிலையில் தேர்ச்சி பெறுதல் என்ற தலைப்பில் ஒரு பிரத்தியேக வாழ்க்கை முறை கருத்தரங்கை நடத்தியது. இந்த கருத்தரங்கில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையைச் சேர்ந்த மிகவும் புகழ்பெற்ற மருத்துவ நிபுணர்கள் சிலர் ஒன்றிணைந்து, ஆரோக்கியமான மற்றும் மிகவும் சீரான வாழ்க்கை முறையை அடைவது தொடர்பாக பெறுமதிமிக்க நுண்ணறிவுகளைப் பெறுவதற்கான வாய்ப்பை சிறப்பு விருந்தினர்களுக்கு வழங்கினர்.
இந்த கருத்தரங்கில் இந்தியாவைச் சேர்ந்த இரண்டு புகழ்பெற்ற மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டனர்: கல்லீரல் நோய்கள் மற்றும் மாற்று அறுவை சிகிச்சை நிறுவனத்தின் தலைவரும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் HPB அறுவை சிகிச்சை சிரேஷ்ட ஆலோசகருமான டொக்டர். இளங்குமரன் கே, மற்றும் Centre for Excellence in Robotics & Complex Spine Surgery இன் முன்னணி மருத்துவ நிபுணரான டொ க்டர். கே. அப்பாஜி கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவ அறிவுசார் உரைகளை வழங்கினர். இதற்கிணங்க விருந்தினர்களுக்கு ஆரோக்கியம், நோய்களின் ஆரம்பகால கண்டறிதல், சிகிச்சை கண்டுபிடிப்புகள் மற்றும் நீண்டகால நல்வாழ்வு உத்திகள் குறித்து வழிகாட்டுதலை வழங்கினர்.
NDB இன் பெறுமதிமிக்க வாடிக்கையாளர்களுக்காக பிரத்தியேகமாக நடத்தப்பட்ட இந்த நிகழ்வானது, சுகாதாரம், நல்வாழ்வு மற்றும் வாழ்க்கை முறை முகாமைத்துவம் உள்ளிட்ட நவீன வாழ்க்கையின் அத்தியாவசிய அம்சங்களை நிவர்த்தி செய்யும் சிந்தனையுடன் தொகுக்கப்பட்ட அனுபவங்கள் மூலம் அதன் வாடிக்கையாளர்களின் வாழ்க்கையை வளப்படுத்த வங்கியானது தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.
இந்த நிகழ்வில்NDB இன் உதவி துணைத் தலைவரும், சிறப்புரிமைத் தெரிவு மற்றும் சிறப்புரிமை வங்கியியல் தலைவருமான கிஹான் புஞ்சிஹேவா, கருத்து தெரிவிக்கையில், “NDB இல், உண்மையான செல்வம் நிதி மற்றும் தனிப்பட்ட நல்வாழ்வை உள்ளடக்கியது என்று நாம் நம்புகிறோம். இந்த கருத்தரங்கானது எமது வாடிக்கையாளர்களுக்கு நிபுணத்துவ அறிவு மற்றும் சமநிலையான, ஆரோக்கியமான வாழ்க்கையை நடத்துவதற்கான சரியான கருவிகளுடன் சித்தப்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.”
இந்த முயற்சியானது நிதியியல் திட்டமிடல், வாழ்க்கை முறை மேம்பாடு அல்லது தனிப்பட்ட அபிவிருத்தி என முக்கியமான ஒவ்வொரு தருணத்திலும் நம்பகமான பங்காளராக பணியாற்றும் NDB வங்கியின் பரந்த பார்வையை பிரதிபலிக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகள் மூலம், NDB வங்கியானது தனது வாடிக்கையாளர்களுடன் அர்த்தமுள்ள ஈடுபாட்டை வளர்ப்பதையும், அதிகாரம் பெற்ற, சிறப்பான வாழ்க்கையை வாழ்வதில் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
NDB வங்கி இலங்கையில் நான்காவது பாரிய பட்டியலிடப்பட்ட வணிக வங்கியாகும். ஆசிய வங்கியியல் மற்றும் நிதி சில்லறை வங்கியியல் விருதுகள் 2023 இல் ஆண்டின் சிறந்த சில்லறை வங்கி (இலங்கை) மற்றும் Asiamoney ஆல் சிறந்த கூட்டாண்மை வங்கி 2023 என பெயரிடப்பட்டது. மேலும் 2022 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாக இலங்கையில் அதிக விருதுகளைப் பெற்ற நிறுவனமாக இலங்கையின் LMD சஞ்சிகையினால் வருடாந்த தரவரிசையில் வரிசைப்படுத்தப்பட்டது.Global Finance USA மற்றும் Euromony ஆகியவற்றின் வருடாந்த சிறந்த வங்கி விருது நிகழ்ச்சிகளில் 2022 இல் இலங்கையின் சிறந்த வங்கியாக தெரிவு செய்யப்பட்டது. மேலதிகமாக , USA யிலுள்ள கிரேட் பிளேஸ் டு வொர்க்அமைப்பினால் இலங்கையில் 2022 இல் சிறந்த 50 பணியிடங்களில் ஒன்றாக பெயரிடப்பட்டது. NDB என்பது NDB குழுமத்தின் தாய் நிறுவனமாகும்,இது மூலதன சந்தை துணை நிறுவனங்களை உள்ளடக்கியநிலையில் ஒரு தனித்துவமான வங்கியியல் மற்றும் மூலதன சந்தை சேவைகள் குழுவை உருவாக்குகிறது. டிஜிட்டல் வங்கியியல் தீர்வுகளினை பயன்படுத்தி அர்த்தமுள்ள நிதி மற்றும் ஆலோசனை சேவைகள் மூலம் தேசத்தையும் அதன் மக்களையும் மேம்படுத்துவதற்கு வங்கி உறுதிபூண்டுள்ளது.