விளையாட்டு
தென்னாபிரிக்கா - அவுஸ்திரேலியா கடைசி போட்டியில் மோதல்

Aug 24, 2025 - 10:01 AM -

0

தென்னாபிரிக்கா - அவுஸ்திரேலியா கடைசி போட்டியில் மோதல்

அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டி இன்று (24) இடம்பெறுகின்றது. 

அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடரில் விளையாடி வருகிறது. 

இதில் கெய்ன்சிலில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 98 ஓட்டங்கள் வித்தியாசத்திலும், மெக்காயில் நடந்த 2-வது ஆட்டத்தில் 84 ஓட்டங்கள் வித்தியாசத்திலும் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. 

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி மெக்காய் நகரில் தற்சமயம் ஆரம்பமாகியுள்ளது. 

போட்டியில் நாணய சுழற்சியில் வென்றுள்ள அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. 

இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை முழுமையாக தென்னாபிரிக்கா கைப்பற்ற முனைப்பு காட்டும். 

அதேவேளையில், ஆறுதல் வெற்றிக்காக அவுஸ்திரேலியா கடுமையாக போராடும். இதனால் இந்தப் போட்டியில் சுவாரஸ்யம் கூடுதலாக காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments
0

MOST READ
01
02
03
04
05