Aug 24, 2025 - 11:32 AM -
0
இந்திய அணியின் பிரபல வீரர் சேதேஷ்வர் புஜாரா இன்று (24) அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக தனது எக்ஸ் தளத்தில் அறிவித்தார்.
அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பதிவில் அவர் தெரிவிக்கையில்,
இந்திய அணியின் ஜெர்சியை அணிந்து, தேசிய கீதம் பாட, ஒவ்வொரு முறையும் நான் மைதானத்தில் அடியெடுத்து வைக்கும் போது அணிக்கு என்னால் முடிந்ததைச் செய்ய முயற்சித்தேன், அதன் உண்மையான அர்த்தத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
ஆனால் எல்லா நல்ல விஷயங்களும் முடிவுக்கு வர வேண்டும், மிகுந்த நன்றியுடன் நான் அனைத்து வகையான இந்திய கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன் என பதிவிட்டுள்ளார்.