Aug 24, 2025 - 06:38 PM -
0
பாகிஸ்தானும், பங்களாதேஷும் 6 புதிய ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளன.
பாகிஸ்தானின் வௌியுறவு அமைச்சர் இஷாக் தார் (Ishaq Dar) உள்ளிட்ட தூதுக்குழுவினர் பங்களாதேஷ்க்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
13 ஆண்டுகளுக்கு பின்னர் பாகிஸ்தானிய சிரேஸ்ட அதிகாரி ஒருவர் பங்களாதேஷூக்கு விஜயம் செய்வது இதுவே முதல் சந்தர்ப்பமாக அமைந்துள்ளது.
பங்களாதேஷில் கடந்த வருடம் ஏற்பட்டிருந்த அரசியல் போராட்டம் காரணமாக அந்தநாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு தப்பிச் சென்று அங்கு தஞ்சமடைந்தார்.
அவர் இந்தியாவுக்கு சாதகமாக செயற்பட்டவர் என்ற குற்றச்சாட்டு ஒன்றும் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்திய - பங்களாதேஷ் இடையிலான உறவிலும் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான சூழலில் பாகிஸ்தான் பங்களாதேஷூடனான உறவை புதுப்பித்து வரும் நோக்கில் பாகிஸ்தானின் வௌியுறவுத்துறை அமைச்சரின் இந்த விஜயம் முக்கியம் பெற்றுள்ளது.
இந்நிலையில், வர்த்தகம், பொருளாதாரம் உள்ளிட்ட 6 முக்கிய உடன்படிக்கைகளில் இரண்டு நாடுகளும் கைச்சாத்திட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.