Aug 25, 2025 - 06:33 AM -
0
இன்று (25) சிம்மத்தில் சந்திரன் இருக்கிறார். உத்திரம் நட்சத்திரத்தில் இருக்கும் சந்திரனால் சித்தயோகம் உருவாகிறது. இன்று புதாதித்ய யோகம் உருவாகுவதால் 12 ராசிகளுக்கு நன்மை அதிகரிக்கும். இன்று மகரம், கும்ப ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளது.
மேஷம் ராசிபலன்
மேஷ ராசிக்கு நன்மைகள் அதிகரிக்க கூடிய நாள். இன்று அதிகரித்து வரும் செலவுகள் உங்களுக்கு தலைவலியாக மாறலாம். வேலை தேடுபவர்களுக்கு சில நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சட்ட சிக்கல் தொடர்பாக வருத்தப்படாத நேரிடும். இன்று உறவுகளின் ஆதரவு கிடைக்கும். வீட்டின் பெரியவர்களின் முழு ஆதரவையும் ஆலோசனையும் கிடைக்கும். இன்று எந்த ஒரு வேலையையும் புத்திசாலித்தனமாக செயல்படுவது நல்லது.
ரிஷப ராசி பலன்
ரிஷப ராசிக்கு நன்மைகள் அதிகரிக்க கூடிய நாள். இன்று பெரிய இலக்குகள் அடைவதற்காக, சிறிய வேலைகள் மீது கவனம் செலுத்த மாட்டீர்கள். இது உங்களுக்கு பிரச்சனை தர வாய்ப்பு உண்டு. நிதி சார்ந்த விஷயங்களில் கிடைக்கும் லாபம் உங்கள் மனமகிழ்ச்சியை அதிகரிக்கும். வேலை தேடுபவர்களுக்கு கூடுதல் முயற்சி தேவைப்படும். இன்று அரசு தொடர்பான திட்டங்களின் முழு பலனை பெறுவீர்கள். பணியிடத்தில் உங்களின் திறமையால் ஆச்சரியப்படுவீர்கள். மாணவர்களுக்கு உயர்கல்விக்கான நல்ல பாதை அமையும்.
மிதுன ராசி பலன்
மிதுன ராசிக்கு உன்னதமான நாளாக இருக்கும். சிலருக்கு பதவி அல்லது கௌரவம் உயர வாய்ப்பு உண்டு. பணியிடத்தில் உங்களின் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். சிலருக்கு சொத்து மூலம் லாபம் அடைவீர்கள். இன்று பத்திரம், வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் தொடர்பாக அதன் சுயாதீனத்தை சரி பார்க்கவும். உங்களின் வசதிகளை உயர்த்துவதற்காக சில பொருட்களை வாங்க நினைப்பீர்கள். பணியிடத்தில் பெரிய சாதனையை அடைய முடியும்.
கடக ராசி பலன்
கடக ராசிக்கு மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். உங்களின் நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். மனமகிழ்ச்சி கிடைக்கக்கூடிய நாள். ஆன்மீகம் தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். இன்று உங்கள் வேலைக்கான திட்டங்களில் முழு நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். உங்களின் வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. அதனால் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். இன்று ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து நன்மை லாபம் பெறுவீர்கள். மாணவர்கள் தங்கள் கல்வியில் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள் தீர்க்க முடியும்.
சிம்ம ராசி பலன்
சிம்மம் ராசிக்கு ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று சாதகமான சூழல் இருக்கும். உங்களின் உடல் வலிமை மேம்படும். இன்று உங்கள் வேலை அல்லது தொழில் தொடர்பாக நண்பர்கள் அல்லது பிறர் கூறக்கூடிய ஆலோசனை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டாம். இன்று சிந்தித்து நீங்களே செயல்படுவது நல்லது. வணிகம் தொடர்பாக சாதகமான நாளாக இருக்கும். இன்று உங்கள் அன்றாட செலவுகளை எளிதாக சமாளிக்க முடியும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசிக்கு இன்று முக்கியமான நாளாக அமையும். சிலருடன் கூட்டாக சேர்ந்து செய்யக்கூடிய வேலைகளில் முன்னேற்றம் உண்டாகும். உங்களின் தலைமைத்துவ திறன் அதிகரிக்கும். வேலை தொடர்பாக பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு போன்ற நல்ல செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் வேலையை சரியாக செய்து முடிக்க முடியும். குடும்ப உறுப்பினர்களின் மனநிலையை புரிந்து கொள்வீர்கள். இன்று அவர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். பெற்றோருக்கு சேவை செய்வதில் நாட்டம் கொள்ளவும்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசியை சேர்ந்தவர்களுக்கு எந்த எந்த ஒரு வேலையிலும் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. தொழில் தொடர்பாக அவசர முடிவு எடுப்பதை தவிர்க்கவும். இன்று யாரையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். இன்று அனைவரிடத்திலும் பணிவாக நடந்து கொள்வது நல்லது. பணியிடத்தில் உங்கள் மீது எதிரிகள் ஆதிக்கம் செலுத்த முயற்சிப்பார்கள். இன்று பிறருக்கு கொடுத்திருக்கக்கூடிய கடன் தொகை திரும்ப பெற முடியும். நிதிநிலை வலுவாக இருக்கும்.
விருச்சிக ராசி பலன்
விருச்சிக ராசிக்கு இன்று ஆன்மிகத்திலும் படிப்பு தொடர்பான விஷயங்களிலும் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். உங்களின் செயல் திறன் அதிகரிக்கும். அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். இன்று சில முக்கியமான நபர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கலாம். குடும்பத்தில் திருமணம் தொடர்பான தடைகள் நீங்கும். பயணங்கள் தொடர்பாக சில நல்ல தகவல்கள் கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் வேலைகளை சரியாக செய்து முடிக்க முடியும். பணம் தொடர்பான விஷயங்களை கவனமாக கையாளவும். இன்று அதிக உற்சாகத்துடன் செயல்படுவதை தவிர்க்கவும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசிக்கு வீட்டு விஷயங்கள் தொடர்பாக கவனமாக செயல்படவும். பொறுப்புகளை முடிக்க கடின உழைப்பு தேவைப்படும். இன்று வீட்டின் பெரியவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். இன்று எந்த ஒரு குடும்பப் பிரச்சினையும் பொறுமையுடன் தீர்க்க முயற்சிக்கவும். குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். இன்று ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மகர ராசி பலன்
மகர ராசிக்கு நல்ல நாளாக அமையும். வணிகம் தொடர்பான எடுக்கும் முயற்சிகள் மூலம் பலன்கள் கிடைக்கும். வேலை தொடர்பாக நீங்கள் எதிர்பார்த்த பலன் கிடைக்க தாமதம் ஏற்படலாம். சிலருக்கு பதவி உயர்வுகள் கிடைக்க வாய்ப்பு உண்டு. இன்று உங்கள் குடும்ப பொறுப்புகள் மற்றும் வேலையை சரியான நேரத்தில் முடிக்க முயற்சி செய்யவும். இன்று ஆன்மீக நிகழ்வுகளில் பங்கேற்க வாய்ப்பு உண்டு. தொழில் தொடர்பாக எந்த ஒரு வாக்குறுதியும் கொடுக்க வேண்டாம்.
கும்ப ராசி பலன்
கும்ப ராசிக்கு சுயமரியாதை நிறைந்த நாளாக அமையும். திருமண வாழ்க்கையை மேம்படுத்துவீர்கள். இன்று உலக இன்பம் அனுபவிக்க வாய்ப்பு உண்டு. இன்று அதிக பணத்தை செலவிடுவதை தவிர்ப்போம். இன்று உங்கள் வேலையில் சில முக்கிய யோசனைகளை செயல்படுத்த நினைப்பீர்கள். அதற்கு முன் அதிகாரிகளின் ஆலோசனை கேட்பது நல்லது. நிதி ரீதியாக முன்னேற்றம் இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடமிருந்து சில நல்ல செய்திகள் கிடைக்க வாய்ப்பு உண்டு.
மீன ராசி பலன்
மீன ராசிக்கு நம்பிக்கை நிறைந்த நாளாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் பேச்சால் பிறரை ஏற்க முடியும். உங்கள் முக்கியமான பணிகளை சரியாக செய்து முடிக்க முடியும். கலை துறையில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். இன்று உங்கள் வருமானத்தை உயர்த்துவதற்கான வாய்ப்புகள் உண்டு. குடும்ப உறுப்பினர்களுக்கு தேவையான உதவிகளை செய்வீர்கள். தொழில் தொடர்பாக புதிய திட்டங்களை தொடங்குவதற்கு சாதகமான நாளாக இருக்கும்.