Aug 25, 2025 - 08:23 AM -
0
3 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் உக்ரைன் - ரஷியா போரை முடிவுக்கு கொண்டு வரும் அமெரிக்காவின் முயற்சிகள் தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது.
இதற்கிடையே நேற்று (24) உக்ரைனின் 34 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட நிலையில் ரஷிய அணு மின் நிலையம் மீது தாக்குதல் நடந்துள்ளது.
ரஷியாவின் குர்ஷ்க் பகுதியில் உள்ள அணு மின் நிலையம் மீது நேற்று உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் அணு மின் நிலையத்தின் ஒரு பகுதி எரிந்தது. சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் தீயை போராடி அணைத்தனர்.
இதில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை என ரஷியா தெரிவித்துள்ளது. ஏற்கனவே தெற்கு ரஷியாவில் எண்ணெய் சுத்தீகரிப்பு நிலையம் உக்ரைன் டிரோன் தாக்குதலில் கடந்த 3 நாட்களாக தீபற்றி எரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.