Aug 25, 2025 - 04:26 PM -
0
ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்த முல்லைத்தீவு கோட்டை, அந்நியப் படையெடுப்புகளை எதிர்த்து வீரமுடன் போராடிய தேசிய வீரர் பண்டார வன்னியன் தலைமையிலான படைகளால் 1803 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 அன்று கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது.
இந்நிகழ்வு இடம்பெற்று 222 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு இன்று (25) மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மேற்படி பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மேலதிக மாவட்ட செயலாளர் (நிர்வாகம்) சி.குணபாலன், மேலதிக மாவட்ட செயலாளர் (காணி) ஜெயகாந், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் சற்குணேஸ்வரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஜி.ஜெயரஞ்சினி உட்பட மாவட்ட செயலக அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து வன்னி மன்னனின் இறுதி மன்னன் மாவீரன் பண்டார வன்னியன், முல்லைத்தீவு கோட்டையை கைப்பற்றி வெற்றி பெற்ற 222 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு முல்லைத்தீவு சுற்று வட்டத்தில் உள்ள மாவீரன் பண்டாரவன்னியனின் சிலை வளாகத்தில் மாவீரன் பண்டாரவன்னியனின் 222 ஆம் ஆண்டு வெற்றிநாளும் அனுஸ்டிக்கப்பட்டது
ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்த முல்லைத்தீவு கோட்டை, அந்நியப் படையெடுப்புகளை எதிர்த்து வீரமுடன் போராடிய மாவீரர் பண்டாரவன்னியன் தலைமையிலான படைகளால் 1803 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 அன்று கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டு இரண்டு பீரங்கிகள் கைப்பற்றப்பட்டது.
இந்நிகழ்வு இடம்பெற்று 222 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு தாக்குதல் மேற்கொண்டு வெற்றியீட்டிய 222 ஆம் ஆண்டு வெற்றிநாள் நிகழ்வு கரைதுறைப்பற்று பிரதேசசபையின் ஏற்பாட்டில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.
அந்தவகையில் முல்லைத்தீவு நகரில் அமைந்துள்ள மாவீரன் பண்டாரவன்னியனின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, மலர்தூவி உணர்வெழுச்சியுடன் அஞ்சலி நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
கரைதுறைப்பற்று பிரதேசசபைத் தவிசாளர் சின்னராசா லோகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்த அஞ்சலி நிகழ்வுகளில் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேசசபை செயலாளர் இராஜயோகினி ஜெக்குமார், கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்கள் தொ.பவுள்ராஜ் யூட் பிரசாத், கரைதுறைப்பற்று பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
--

