Aug 25, 2025 - 05:57 PM -
0
அரசியல் மற்றும் கல்வித் துறையில் சிறப்பான பங்களிப்புகளை வழங்கி வரும் எழுத்தாளர் மற்றும் ஆசிரியரும் ஆகிய கலாநிதி பிரபாகரன் 'அரசியல் விஞ்ஞானத்தின் அடிப்படைகள் – பகுதி 2' நூல் வெளியீடு நிகழ்வு மத்திய மாகாண ஆளுநரின் தலைமையில் தெல்தோட்டையில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் சிறப்பாக நிகழ்வு நடைப்பெற்றது.
நூல் வெளியீட்டு விழாவில், விஷேட அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர்ஜகத் மனுவர்ண, மத்திய மாகாண ஆளுநர், நோர்வூட் பிரதேச சபை தவிசாளர், கண்டி வலயக் கல்வி பணிப்பாளர், பிரதி கல்வி பணிப்பாளர், கோட்டக் கல்வி பணிப்பாளர், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், உயர்தர வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், கல்வித் துறையில் செயற்படும் விடுமுறையாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டு இருந்தனர்.
--