Aug 26, 2025 - 09:16 AM -
0
இன்று (26) அனுமனின் அருள் கிடைக்கும் நாளில் கன்னி ராசியில் செவ்வாய் சந்திரன் சேர்ந்து தன யோகத்தை உருவாக்குகின்றனர். இன்று கும்ப ராசியில் உள்ள சதயம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம். இன்று விருச்சிகம், மகரம் உள்ளிட்ட ராசிகளுக்கு அற்புதம் பலன்கள் கிடைக்கும்.
மேஷம் ராசி பலன்
மேஷ ராசிக்கு இன்று நன்மைகள் அதிகம் கிடைக்கக்கூடிய நாள். செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. நீங்கள் விரும்பாவிட்டாலும் செலவுகள் செய்ய நேரிடும். உங்களின் வணிக திட்டங்களில் ஊக்கத்துடன் செயல்படுவீர்கள். உங்க வீட்டில் விருந்தினர்களின் வருகை காரணமாக சூழ்நிலை இனிமையாக இருக்கும். தாயின் ஆரோக்கியத்தை கவனம் தேவை. உங்கள் துணையுடன் சேர்ந்து சில புதிய வேலைகளை தொடங்க முடியும்.
ரிஷபம் ராசிபலன்
இன்று ரிஷப ராசிக்கு செல்வாக்கு மற்றும் புகழ் அதிகரிக்கும். உங்களின் சிறப்பான செயல்பாடுகளால் நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். பழைய தவறுகளை மீண்டும் செய்ய வேண்டாம். இன்று நீங்கள் வாங்கிய கடன் தொகையை திரும்ப செலுத்த முடியும். இன்று நீங்கள் கொடுத்த வாக்குறுதி சரியான நேரத்தில் நிறைவேற்ற முடியும். இன்று பல வழிகளில் இருந்து வருமானம் வந்து சேரும். உங்களின் குடும்ப சூழல் மகிழ்ச்சியாக இருக்கும்.
மிதுன ராசி பலன்
மிதுன ராசிக்கு மிகவும் பயனளிக்கக்கூடிய நாளாக இருக்கும். நீண்ட காலமாக நீங்கள் செயல்படுத்த நினைக்கும் தொழில் யோசனைகளை செயல்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உங்களிடம் மறைந்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டு. உங்கள் தொழில், வியாபாரம் தொடர்பாக பெரிய லாபம் ஏற்றும் வாய்ப்புகள் பெறுவீர்கள். பணியிடத்தில் தாராளமான மனப்பான்மை காட்டுவீர்கள். சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். இன்று எந்த தவறும் நடக்காத வண்ணம் விழிப்புணர்வுடன் செயல்படவும்.
கடக ராசி பலன்
கடக ராசிக்கு மற்ற நாட்களை உடை விட இன்று சிறப்பான பலன்கள் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் ஆதரவை பெறுவீர்கள். உங்கள் வேலை தொடர்பாக எந்த விஷயத்திலும் அவசரப்பட்டு செயல்படுவதை தவிர்க்கவும். இல்லையெனில் அது பின்னாளில் வருத்தத்தை தரும். இன்று ஆரம்பத்தை வெளிப்படுத்தும் வகையில் இருந்து ஒரு பொருட்களையும் வாங்குவதை தவிர்க்கவும். திருமணம் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். இந்த காலமாக கவலை தந்த விஷயங்களில் இருந்து நிவாரணம் அடைவீர்கள்.
சிம்ம ராசி பலன்
சிம்ம ராசி சேர்ந்தவர்களுக்கு இன்று ஆன்மீக நடவடிக்கைகளை ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். இன்று முக்கிய வேலைகளை முடிப்பதில் உறவினர்களின் ஆலோசனை பின்பற்றுவதால் நல்ல பெயர் பெறுவீர்கள். இன்று உடல் நலம் தொடர்பான விஷயங்களை புறக்கணிக்காதீர்கள். இன்று புதிய நண்பர்கள் அல்லது தெரியாது நபர்களை நம்புவதற்கு முன் யோசித்து செயல்படவும். இன்று அவசரமாக எந்த செயலிலும் ஈடுபடுவதை தவிர்ப்பதோடு ஒப்பந்தத்தை இறுதி செய்வது சிக்கலை தரும். பிள்ளைகளின் திருமணம் தொடர்பாக இருந்த தடைகள் நீங்கும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசிக்கு சொத்து வாங்கும் வாய்ப்புகள் இருக்கும். சொத்து தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உங்களின் பணியிடத்தில் தலைமைத்துவம் சிறப்பாக இருக்கும். உடல் நலம் தொடர்பாக சிக்கலை சந்திக்க வாய்ப்பு உண்டு. எந்த ஒரு பாதகமான சூழ்நிலைகளையும் கூட பொறுமையாக கையாள்வது நல்லது. இன்று வீட்டின் பெரியவர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். உங்கள் வாழ்க்கை துணை பலவிதத்தில் உங்களுக்கு உதவுவார்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி சேர்ந்தவர்களுக்கு கடினமாக உழைக்க வேண்டிய நாளாக இருக்கும். எந்த வேலையும் அவசரமாக செய்வதை தவிர்க்க வேண்டும். இந்த எதிலும் ரிஸ்க் எடுக்க வேண்டாம். நம்பிக்கைக்கு உரியவர்களின் ஆலோசனை நன்மை தரும். உங்களின் செயல்பாடுகளில் முன்னேற்ற பாதையில் மாற்றிக் கொள்வது நல்லது. வேலை அல்லது சேவை துறையில் உள்ளவர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். புதிய தொடர்பு கொள்ள நல்ல பலன் பெறுவீர்கள். பெற்றோருடன் சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.
விருச்சிக ராசி பலன்
விருச்சிக ராசிக்கு இன்று சாதகமான நாளாக இருக்கும். சமூகம் தொடர்பாக சில முக்கிய பணிகளில் ஈடுபடுவீர்கள். வாழ்க்கை கிடைக்கும் திடீர் பண ஆதாயம் மகிழ்ச்சியை அதிகரிக்கும். இன்று யாரிடத்தில் பேசுவதற்கு முன் மிகவும் யோசித்து பேசுவது நல்லது. மாணவர்கள் படிப்பை சிறப்பாக செயல்படுவார்கள். உங்களின் முக்கியமான வேலைகளை சரியாக செய்து முடிக்க முடியும். இது உங்கள் செயல்பாடுகளில் நிதானத்தை கடைபிடிக்கவும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசிக்கு எந்த விஷயத்திலும் அவசரமாக முடிவு எடுப்பதை தவிர்க்கவும். உங்கள் பிள்ளைகளிடம் இருந்து மகிழ்ச்சியான சில தகவல்கள் கிடைக்கும். உங்கள் வேலையில் பதவி உயர்வு போன்ற நல்ல செய்திகள் கிடைக்கும். பிறரின் ஆதரவு உங்கள் செயலில் முன்னேற்றம் பெற காரணமாக அமையும். வணிகம் தொடர்பாக இன்று சிறந்த நாளாக அமையும். ஆன்மீக பணிகளில் நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். சிலருக்கு சலுகைகள் கிடைக்க வாய்ப்பு உண்டு. வேலை தேடுபவர்களுக்கு நல்ல நாளாக அமையும்.
மகர ராசி பலன்
மகர ராசிக்கு இன்று உற்சாகமான நாளாக அமையும். சிலருடன் சேர்ந்து செய்யக்கூடிய வேலையில் நல்ல வெற்றி கிடைக்கும். சில நாட்களாக இருந்த தடை தாமதங்கள் நீங்கும். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும். புதிய திட்டங்களில் நல்ல பலன் கிடைக்கும். உங்கள் கூட்டாளிகளின் ஆதரவு பெறுவீர்கள். முக்கியமான பணிகளை முடிப்பதில் கவனம் காட்டுவீர்கள். இன்று உங்கள் பணி இடத்தில் எதிரிகளின் தொந்தரவு இருக்கும்.
கும்ப ராசி பலன்
கும்ப ராசிக்கு இன்று தொழில் தொடர்பாக நல்ல பலன் கிடைக்கக் கூடியதாக இருக்கும். முக்கிய வேலைகளை புத்திசாலித்தனமாக செய்து முடிப்பீர்கள். இன்று உங்களின் செல்வம் நிலை அதிகரிக்கும். உறவினர்களிடமிருந்து முழு ஆதரவை பெறுவீர்கள். இன்று குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். இன்று முடிவுகள் எடுக்கும் விஷயத்தை கவனம் தேவை. தேவையற்ற மனக்கவலை உங்களை சூழ்ந்திருக்கும். மாணவர்கள் படிப்பு தொடர்பாக கவலை அதிகரிக்கும்.
மீன ராசி பலன்
மீன ராசிக்கு இன்று கலைத்துறை தொடர்பாக மிகவும் நல்ல நாளாக இருக்க போகிறது. உங்கள் என் தனிப்பட்ட வாழ்க்கையில் சில முக்கியமான தகவல்கள் கிடைக்கும். பணியிடத்தில் மரியாதை மற்றும் மகிழ்ச்சி அதிகரிக்கும். இந்த உலக இன்பங்களை அனுபவிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் வேலையை முடிப்பதில் சரியாக திட்டமிட்டு செயல்படவும். குடும்ப பொறுப்புகளை நிறைவேற்ற சிரமங்கள் சந்திப்பீர்கள். வேலை தொடர்பாக பயணங்கள் செல்ல வாய்ப்பு உண்டு.