Aug 26, 2025 - 11:52 AM -
0
காசா முழுவதும் இன்று (26) இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளன.
இஸ்ரேல் அங்கு தொடர்ச்சியான தாக்குதல்கழள நடத்தி வருகின்றன.
தொடர்ந்தும் பொதுமக்கள் தங்கியிருக்கும் பகுதிகளை இலக்கு வைத்து இஸ்ரேல் இராணுவம் தாக்குதல்களை நடத்தி வருவதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.
இதேவேளை, நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் மேலும் 5 ஊடகவியலாளர்கள் பலியாகினர்.
அதன்படி, போர் ஆரம்பமானது முதல் இதுவரையான காலப்பகுதியில் காசாவில் 190க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.