Aug 26, 2025 - 12:05 PM -
0
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த படம் 'கூலி'.
பேன் இந்தியா படமாக வெளிவந்த இந்தப் படத்திற்கு தமிழைத் தவிர, தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்து அதிக வசூலைப் பெற்றது.
படத்தின் முதல் நாள் வசூல், நான்காம் வசூல் ஆகியவற்றை படக்குழு அதிகாரப்பூர்வமாகப் பகிர்ந்தது.
கடைசியாக 404 கோடி வசூலைப் பகிர்ந்து இருந்தார்கள். அதன்பின் எந்த அதிகாரப்பூர்வத் தகவலும் வெளியாகவில்லை.
இதனிடையே, படம் தற்போது 500 கோடி வசூலைப் பெற்றிருப்பதாக பொக்ஸ் ஒபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் 300 கோடி வசூல், வெளிநாடுகளில் 200 கோடி வசூல் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவில் மட்டும் இந்தப் படம் 6.7 மில்லியன் வசூலைக் கடந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்கள்.
இந்திய மதிப்பில் 58 கோடி ரூபாய். மற்ற வெளிநாடுகளிலும் அதிக வசூலைக் குவித்துள்ளது.
ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த படங்களில் 500 கோடி வசூலைக் கடந்த 3வது படம் இது. இதற்கு முன்பாக '2.0, ஜெயிலர்' ஆகிய படங்கள் 500 கோடி வசூலைக் கடந்த படங்களாகும்.