சினிமா
ஒரே நாளில் 18 மில்லியன் பார்வைகளை கடந்த மதராஸி

Aug 26, 2025 - 12:33 PM -

0

ஒரே நாளில் 18 மில்லியன் பார்வைகளை கடந்த மதராஸி

முன்னணி இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 'மதராஸி' திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் 5 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வல், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். 

அண்மையில் வெளியான மதராஸி படத்தின் டிரெய்லர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில், 'மதராஸி' படத்தின் டிரெய்லர் யூடியூபில் பல மொழிகளை சேர்த்து 18 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை கடந்துள்ளது. 

வெளியான 1 நாளில் இவ்வளவு அதிகமான பார்வைகள், ரசிகர்கள் மத்தியில் உள்ள எதிர்ப்பார்ப்பை வௌிப்படுத்தியுள்ளது. 

மேலும் இது அமரன் படத்தின் டிரெய்லரின் மொத்த பார்வைகளை ஒரே நாளில் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05