பல்சுவை
குட்கா வாங்க பணம் தராததால் பெண் தற்கொலை!

Aug 26, 2025 - 12:55 PM -

0

குட்கா வாங்க பணம் தராததால் பெண் தற்கொலை!

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் குட்கா வாங்க கணவர் பணம் தராததால் தனது 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தானும் விஷம் குடித்து தற்கொலை பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

உத்தரப் பிரதேச மாநிலம் சித்ரகூட் மாவட்டத்தில் கடந்த 23 ஆம் திகதி நடந்த இந்த சம்பவத்தில் 30 வயதுடைய அந்தப் பெண்ணும், அவரது 2 மற்றும் 4 வயதுடைய இரண்டு மகள்களும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 5 வயது மகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

கணவன் குட்கா பழக்கத்தை விட்டுவிடுமாறு கூறியதால் கோபம் கொண்ட அந்தப் பெண் இந்த கொடூரமான முடிவை எடுத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

குழந்தைகள் முன்னிலையில் குட்கா சாப்பிடுவதை நிறுத்துமாறு கணவர் வற்புறுத்தியுள்ளார்.

 

இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் விபரீதத்தில் முடிந்துள்ளது.

 

அந்தப் பெண் என்ன வகையான விஷத்தைப் பயன்படுத்தினார். அது அவருக்கு எப்படி கிடைத்தது என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05