Aug 26, 2025 - 02:51 PM -
0
ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடருக்கான ஓமான் குழாம் இன்று (26) அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய கிண்ணத்தில் முதல் முறையாக விளையாடவுள்ள ஓமான் அணி ஜதிந்தர் சிங் தலைமையில் 17 பேர் கொண்ட குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குழாமில் atinder Singh (c), Hammad Mirza, Vinayak Shukla, Sufyan Yousuf, Ashish Odedera, Aamir Kaleem, Mohammed Nadeem, Sufyan Mehmood, Aryan Bisht, Karan Sonavale, Zikriya Islam, Hassnain Ali Shah, Faisal Shah, Muhammed Imran, Nadeem Khan, Shakeel Ahmad, Samay Shrivastava ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் செப்டம்பர் 9 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ளது.
இதில் நடப்பு சம்பியன் இந்தியா உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கவுள்ளன.
அடுத்த வருடம் நடைபெற உள்ள ஐ.சி.சி. டி20 உலக கிண்ணத் தொடருக்கு, ஆசிய அணிகளை தயார் படுத்துவதற்காக இந்த தொடர் இம்முறை இருபதுக்கு 20 வடிவில் நடத்தப்பட உள்ளது.
இந்த தொடரில் பங்கேற்றுள்ள அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
அதன்படி 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு இராச்சியம், ஓமான் அணிகளும், 'பி' பிரிவில் இலங்கை, ஆப்கானிஸ்தான் பங்களாதேஷ், ஹொங்கொங் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும்.