வடக்கு
24 ஆவது நாளாக தொடரும் போராட்டம்

Aug 26, 2025 - 04:12 PM -

0

24 ஆவது நாளாக தொடரும் போராட்டம்

மன்னார் மாவட்டத்தில் காற்றாலை செயற் திட்டத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டமானது 24 ஆவது நாளாக இன்று (26) இடம்பெற்று வருகின்ற நிலையில் மன்னார் மாவட்ட செயலக வளாகத்தில் பொலிஸார் மற்றும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. 

மன்னாரில் காற்றாலை மின் கோபுரங்கள் புதிதாக அமைக்கப்படுவதற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டம் இன்று 24 ஆவது நாளாக தொடர்கின்றது. 

குறித்த போராட்டத்தில் அருட்தந்தை சக்திவேல் உள்ளடங்களாக தென்பகுதியில் இருந்து மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள்,அருட்சகோதரிகளும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர். 

இன்றைய தினம் மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம் பெற்று வந்த நிலையில் போராட்டகாரர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து அபிவிருத்தி குழு தலைவர் மற்றும் அரசாங்க அதிபர் உள்ளடங்களாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மகஜர் ஒன்றை வழங்குவதற்கு மாவட்ட செயலகத்திற்கு அமைதியான முறையில் நுழைந்த நிலையில் பொலிஸார் போராட்டகாரர்களை வெளியேற்ற முயற்சித்தனர். 

இந்த நிலையில் போராட்டகாரர்கள் வெளியேற முடியாது என தெரிவித்த நிலையில் பொலிஸாருக்கு போராட்டக்காரர்களுக்கும் முரண்பாடு இடம்பெற்றது. 

இந்த நிலையில் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சம்பவ இடத்திற்கு வருகை தந்த நிலையில் போராட்டக்காரர்களை அமைதியான முறையில் மாவட்ட செயலகத்துக்குள் அனுமதித்தார். 

இந்த நிலையில் நீண்ட இழுபறிக்கு பின்னர் போராட்டகாரர்கள் அபிவிருத்தி குழு தலைவர், அரசாங்க அதிபர், பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மகஜரை கையளித்தனர். 

குறித்த போராட்டத்துக்கு ஆதரவு வழங்கும் விதமாக அருட்தந்தை சக்திவேல் தலைமையில் அருட்தந்தை அருட்சகோதரிகள் கலந்து கொண்டு போராட்டத்துக்கு ஆதரவு வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05