Aug 27, 2025 - 11:06 AM -
0
ஐ.டி. ஊழியர் கடத்தப்பட்ட வழக்கில் நடிகை லட்சுமி மேனனிடம் விசாரணை நடத்த பொலிஸார் திட்டமிட்டு இருந்த நிலையில், அவர் தலைமறைவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மதுபானசாலையில் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து ஐ.டி. ஊழியர் தாக்கப்பட்டதாகவும், கடத்தப்பட்டதாகவும், நடிகை லட்சுமி மேனன் அக்கடத்தல் கும்பலை சேர்ந்தவர் என்றும் புகார் அளிக்கப்பட்டது. புகாரைத் தொடர்ந்து ஐடி ஊழியரை கடத்திய கும்பலைச் சேர்ந்த மிதுன், அனீஷ் மற்றும் சோனா மோல் ஆகியோரை பொலிஸார் ஏற்கனவே கைது செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து நடிகை லட்சுமி மேனனிடம் பொலிஸார் விசாரணை நடத்த திட்டமிட்டு இருந்தனர். இத்தகவலை அறிந்து லட்சுமி மேனன் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.
2011 ஆம் ஆண்டு வினயன் இயக்கிய 'ரகுவிண்டெ சுவந்தம் ரசியா' படத்தின் மூலம் அறிமுகமானவர் லட்சுமி மேனன். அதன் பிறகு கும்கி, சுந்தரபாண்டியன், கொம்பன், றெக்க உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.