Aug 27, 2025 - 11:09 AM -
0
NDB வங்கியானது , ஆகஸ்ட் 6, 2025 அன்று ஹில்டன் கொழும்பு ரெசிடன்சிஸ்ஸில் NDB டோஸ்ட்மாஸ்டர்ஸ் கழகத்தின் 13வது நிறைவேற்றுக் குழு தெரிவு விழாவை பெருமையுடன் கொண்டாடியது. இந்த மாலைப் பொழுதில், திறமையை வளர்ப்பது, தகவல் தொடர்புகளை மேம்படுத்துவது மற்றும் அதன் ஊழியர்களிடையே தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வளர்ச்சியை வளர்ப்பதில் வங்கியின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் தலைமைத்துவம், கூட்டுறவு மற்றும் உத்வேகம் ஆகியவற்றை முன்னிறுத்தும் வகையில் இந்நிகழ்வானது இடம்பெற்றது.
இந்த விழாவில் NDB வங்கியின் மனிதவள துணைத் தலைவர் திரு. லசந்த தாசநாயக்க பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். கௌரவ விருந்தினராக மாவட்டம் 82 மாவட்ட பணிப்பாளரான புகழ்பெற்ற டோஸ்ட்மாஸ்டர் நிரோஷன் நடராஜா கலந்து கொண்டார். அவர் புதிதாக நியமிக்கப்பட்ட தலைவர்களுக்கு ஊக்கமளிக்கும் உரையை நிகழ்த்தினார். மேலும் இந்த நிகழ்வில் மாவட்ட அதிகாரிகள் DTM பாத்தியா ஹெட்டியாராச்சி (திட்ட தர பணிப்பாளர் ) மற்றும் DTM பியகர ஜெயரத்ன (கழக வளர்ச்சிபணிப்பாளர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த மாலை நேர நிகழ்வின் பிரதம உரையை ரூட்கோடின் பிரதம நிறைவேற்று அதிகாரி டோஸ்ட்மாஸ்டர் அழகன் மகாலிங்கம் நிகழ்த்தினார், அவர் தனது உரையில் தலைமைத்துவம், வளர்ச்சி மற்றும் சிறந்து விளங்க ஒருவரின் இலகு நிலையை தாண்டிச் செல்லத் தேவையான தைரியம் குறித்த மதிப்புமிக்க நுண்ணறிவுகளுடன் பங்கேற்பாளர்களை ஊக்கப்படுத்தினார்.
மாவட்ட அளவில் கழகத்தின் செயலாற்றுகையின் பங்கை வெளிப்படுத்தும் வகையில், DTM உறுப்பினர்களான தரிந்து டி சில்வா (மக்கள் தொடர்பு முகாமையாளர், மாவட்டம் 82), TM தில்ருக்ஷி மேர்வின் (பிரிவு பணிப்பாளர் - பிரிவு E), மற்றும் TM பிரிஸ்ட்லி இவான் (பிராந்திய பணிப்பாளர் - பிராந்தியம்E 4) ஆகியோர் NDB டோஸ்ட்மாஸ்டர்ஸின் குறிப்பிடத்தக்க ஆற்றல் மற்றும் பரந்த டோஸ்ட்மாஸ்டர்கள் சமூகத்தில் செல்வாக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தினர்.
இந்த மாலை நிகழ்வின் குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாக 14 புதிய உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்., இது கழகத்தின் எதிர்காலத்தை மேலும் வலுப்படுத்தியது. 2025/26 காலாண்டிற்கான தலைவராக TM முகமது ஃபஸ்லான் நியமிக்கப்பட்டார். புதிதாக நியமிக்கப்பட்ட நிறைவேற்றுக் குழுவுடன், இந்த கழகமானது மற்றொரு வெற்றிகரமான ஆண்டில் தகவல் தொடர்பு சிறப்பம்சம், தலைமைத்துவ மேம்பாடு மற்றும் கூட்டுறவுக்கு இட்டுச் செல்லத் தயாராக உள்ளது.
NDB வங்கியானது டோஸ்ட்மாஸ்டர்ஸ் போன்ற தளங்கள் மூலம், தனது மக்களில் தொடர்ந்து முதலீடு செய்து, அவர்களின் திறமைகளை வளர்த்துக் கொள்ளவும், அவர்களின் திறனை வெளிப்படுத்தவும், வங்கியின் கலாசாரத்தை வரையறுக்கும் வகையில் சிறந்து விளங்குதல், குழுப்பணி மற்றும் தொடர்ச்சியான வளர்ச்சியின் மதிப்புகளை உள்ளடக்கவும் ஊக்குவிக்கிறது.
NDB வங்கி இலங்கையில் நான்காவது பாரிய பட்டியலிடப்பட்ட வணிக வங்கியாகும். ஆசிய வங்கியியல் மற்றும் நிதி சில்லறை வங்கியியல் விருதுகள் 2023 இல் ஆண்டின் சிறந்த சில்லறை வங்கி (இலங்கை) மற்றும் Asiamoney ஆல் சிறந்த கூட்டாண்மை வங்கி 2023 என பெயரிடப்பட்டது. மேலும் 2022 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாக இலங்கையில் அதிக விருதுகளைப் பெற்ற நிறுவனமாக இலங்கையின் LMD சஞ்சிகையினால் வருடாந்த தரவரிசையில் வரிசைப்படுத்தப்பட்டது.Global Finance USA மற்றும் Euromony ஆகியவற்றின் வருடாந்த சிறந்த வங்கி விருது நிகழ்ச்சிகளில் 2022 இல் இலங்கையின் சிறந்த வங்கியாக தெரிவு செய்யப்பட்டது. மேலதிகமாக , USA யிலுள்ள கிரேட் பிளேஸ் டு வொர்க்அமைப்பினால் இலங்கையில் 2022 இல் சிறந்த 50 பணியிடங்களில் ஒன்றாக பெயரிடப்பட்டது. NDB என்பது NDB குழுமத்தின் தாய் நிறுவனமாகும், இது மூலதன சந்தை துணை நிறுவனங்களை உள்ளடக்கியநிலையில் ஒரு தனித்துவமான வங்கியியல் மற்றும் மூலதன சந்தை சேவைகள் குழுவை உருவாக்குகிறது. டிஜிட்டல் வங்கியியல் தீர்வுகளினை பயன்படுத்தி அர்த்தமுள்ள நிதி மற்றும் ஆலோசனை சேவைகள் மூலம் தேசத்தையும் அதன் மக்களையும் மேம்படுத்துவதற்கு வங்கி உறுதிபூண்டுள்ளது.