வணிகம்
வவுணதீவில் அறுவடை வெற்றியை விவசாய நவீனமயமாக்கல் கிராமத் திட்டத்துடன் கொண்டாடிய கொமர்ஷல் வங்கி

Aug 27, 2025 - 11:12 AM -

0

வவுணதீவில் அறுவடை வெற்றியை விவசாய நவீனமயமாக்கல் கிராமத் திட்டத்துடன் கொண்டாடிய கொமர்ஷல் வங்கி

கொமர்ஷல் வங்கியானது அண்மையில் மட்டக்களப்பின் வவுணதீவில் நடைபெற்ற பொற்கதிர் அறுவடை விழாவில் பங்கேற்றது. வங்கியின் விவசாய நவீனமயமாக்கல் கிராமத் திட்டத்தின் சமீபத்திய வெற்றியைக் கொண்டாடும் வகையில் இந்த நிகழ்வானது ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் இந்த முயற்சித் திட்டமானது விவசாயிகளுக்கு நவீன விவசாய தொழில்நுட்பம் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றுவதற்கான ஆதரவினை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

கிராமம் கிராமமாக நடைபெற்று வரும் இந்த திட்டப்பணியானது, பாரம்பரிய அறிவு மற்றும் நவீன விவசாய தொழில்நுட்பத்தை இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முயற்சியானது விவசாயிகள் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும், நிலைபெறுதகு தன்மையை மேம்படுத்தவும், அவர்களின் பொருளாதார மீள்தன்மையை வலுப்படுத்தவும் உதவுகிறது. கல்வி மற்றும் விவசாய நிபுணர்களால் வழிநடத்தப்படும் இந்த திட்டமானது, நிலையான நீர்ப்பாசனம், நடவு இயந்திரங்கள் மற்றும் காலநிலை-எதிர்ப்பு பயிர் வகைகள் போன்ற மேம்பட்ட நுட்பங்களுடன் விவசாயிகளை வலுப்படுத்த உதவுகின்றது. வளதிறன் மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்புள்ள நடைமுறைகளை ஊக்குவிப்பதுடன் மற்றும் விவசாய பெறுமதிச் சங்கிலியில் SME பங்கேற்பை வலுப்படுத்துகிறது. 

பொற்கதிர் என்று பெயரிடப்பட்ட இந்த வவுணதீவு நிகழ்வானது, பாரம்பரிய தமிழ் கலாசார நிகழ்ச்சிகளுடன் வயல்களைச் சென்றடைந்ததுடன் ஆரம்பமானது. அதைத் தொடர்ந்து கடவுள்களுக்கு காணிக்கைகள், சிறப்பு விருந்தினர்களால் அறுவடை மற்றும் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட நவீன அறுவடைச் சடங்கு நுட்பங்களின் செயல் விளக்கங்கள் ஆகியவை இடம்பெற்றன. 

இந்த விழாவில் விவசாய இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களின் காட்சிப்படுத்தல்களும் இடம்பெற்றதுடன் மேலும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்திற்கு வங்கியினால் வழங்கப்பட்ட இரண்டு குறிப்பிடத்தக்க பங்களிப்புகளும் இதில் உள்ளடங்குகின்றன: இதற்கிணங்க ஹேலிஸ் சோலார் நிறுவனத்துடன் இணைந்து நன்கொடையாக வழங்கப்பட்ட நுண் நீர்ப்பாசன வசதிகளுடன் கூடிய சூரிய சக்தியில் இயங்கும் நீர் பம்ப் அமைப்பு, மற்றும் பீடத்தின் பசுமை இல்லத்தின் உரமாக்கல் முறையை மீண்டும் நிலைநிறுத்துவதற்கான ஒரு பங்களிப்பு என்பவை வங்கியினால் வழங்கப்பட்டவையாகும். 

வவுணதீவு திட்டமானது, கொமர்ஷல் வங்கியின் விவசாய நவீனமயமாக்கல் கிராமத் திட்டத்தின் இரண்டாவது கட்டமாகும். இது கடந்த ஆண்டு கிளிநொச்சியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பீடத்துடன் இணைந்து ஆரம்பிக்கப்பட்டது. 

உலகின் முதல் 1000 வங்கிகளில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் முதலாவது வங்கியாக கொமர்ஷல் வங்கி திகழ்வதுடன் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் (CSE) வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது. தனியார் துறையின் மிகப்பாரிய கடன் வழங்குநராக விளங்கும் கொமர்ஷல் வங்கி, SME துறையினருக்கு பாரியளவில் கடனுதவி வழங்கும் கடன் வழங்குநராகவும் உள்ளது. மேலும் டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியில் திகழும் இவ்வங்கி இலங்கையின் முதலாவது 100% கார்பன்-நடுநிலைமையை பேணும் வங்கியாகும். கொமர்ஷல் வங்கி நாடளாவிய ரீதியில் மூலோபாய ரீதியாக அமைந்துள்ள கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பை செயற்படுத்தி வருகிறது. 

மேலும், பங்களாதேஷில் 20 கிளைகள், மாலைத்தீவில் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட முழுமையான Tier I வங்கி மற்றும் மியன்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனத்துடன் சர்வதேச ரீதியில் பரந்தளவில் தடம் பதித்த இலங்கையின் வங்கியாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது. துபாய் சர்வதேச நிதியியல் நிலையத்தில் (DIFC) பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதற்கு துபாய் நிதியியல் சேவைகள் அதிகாரசபையிடமிருந்து வங்கி அண்மையில் ஒப்புதல் பெற்றதுடன் மேலும் இந்த மைல்கல்லை எட்டிய இலங்கையில் முதல் வங்கியாக தன்னை பதிவு செய்துள்ளது, இது அதன் உலகளாவிய தடத்தை விரிவுபடுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க பங்கிற்கு வழிவகுத்துள்ளது. வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனமான CBC Finance Ltd. அதன் சொந்த கிளை வலையமைப்பு மூலம் பல்வேறு நிதியியல் சேவைகளை வழங்குகிறது.

Comments
0

MOST READ