வணிகம்
தொழில் புரிய சிறந்த இடமாக T-Print நிறுவனம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது - மனிதத்தை மையப்படுத்திய சிறப்பை நோக்கிய ஒரு முக்கிய மைல்கல்

Aug 27, 2025 - 11:38 AM -

0

தொழில் புரிய சிறந்த இடமாக T-Print நிறுவனம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது - மனிதத்தை மையப்படுத்திய சிறப்பை நோக்கிய ஒரு முக்கிய மைல்கல்

ஈஸ்வரன் குழுமத்தின் துணை நிறுவனமான டி-பிரிண்ட் (பிரைவேட்) லிமிடெட் [T-Print (Pvt) Ltd] நம்பிக்கை, ஒத்துழைப்பு மற்றும் ஊழியர்கள் நல்வாழ்வின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட பணியிட கலாசாரங்களை கொண்ட நிலையில் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட கௌரவமான தொழில் புரிவதற்கு சிறந்த இடம் என அதிகாரப்பூர்வமாக சான்றளிக்கப்பட்டுள்ளது. 

கிரேட் பிளேஸ் டு வேர்க்கினால் [Great Place to Work®] வழங்கப்பட்ட இந்த சான்றிதழானது நேரடி ஊழியர் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டதுடன் மற்றும் நேர்மறையான, உள்ளடக்கிய மற்றும் உயர் செயல்திறன் கொண்ட தொழில் புரியும் சூழலை வளர்ப்பதற்கான டி-பிரிண்டின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. 

இந்த உற்சாகமான குழுவின் ஒரு பகுதியாக திகழ்வதானது உண்மையிலேயே அற்புதமானதாக உள்ளது என்று டி-பிரிண்ட் ஊழியர் ஒருவர் தனது கருத்தினை பகிர்ந்து கொண்டார். இங்குள்ள அக்கறையுள்ள கலாசாரமானது எமது தனிப்பட்ட மற்றும் தொழில்முறை பயணங்களில் ஆர்வத்துடன் பணியாற்றவும் அதிக உயரங்களை அடையவும் எம்மை ஊக்குவிக்கிறது. 

டி-பிரிண்ட் (பிரைவேட்) லிமிடெட்டின் மனிதவளம் மற்றும் சட்டத் தலைவரான நிமாலி செனவிரத்ன தெரிவிக்கையில், டி-பிரிண்டில் மக்கள் மிகப்பெரிய சொத்தாக திகழ்கின்றனர். எமது பணியானது கலாசாரம் நம்பிக்கை, அக்கறை மற்றும் பகிரப்பட்ட நோக்கத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் புதுமைபெற, ஒத்துழைக்க மற்றும் வளர்ச்சியடைவதற்கு அதிகாரம் பெற்ற ஒரு பணியிடத்தை உருவாக்க நாம் ஒவ்வொரு நாளும் பாடுபடுகிறோம். மகிழ்ச்சியான ஊழியர்கள் உண்மையிலேயே சிறந்த பணியிடங்களை உருவாக்குகிறார்கள். 

டி-பிரிண்ட் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரான சோமசுந்தரம் மீனாட்சி சுந்தரம் தெரிவிக்கையில், இந்த அங்கீகாரமானது முழு நிறுவனத்திற்கும் பெருமையான தருணமாகும். ஊடக வெளியீடு 

இது எமது செயல்பாடுகளை வழிநடத்தும் மற்றும் எமது குழுவை ஒன்றிணைக்கும் வலுவான பெறுமதி மிக்க அமைப்பை பிரதிபலிக்கிறது. தகுதி, நியாயம் மற்றும் கௌரவம் ஆகியவற்றில் வேரூன்றிய ஒரு கலாசாரத்தை வளர்ப்பதற்காக மனிதவள குழுவை நான் பாராட்டுகிறேன். நாம் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருவதால், எமது உலகளாவிய இருப்பை விரிவுப்படுத்தவும், எமது சிறந்த தரங்களை மேலும் எடுத்துச் செல்லவும் நாம் எதிர்நோக்கி காத்திருக்கிறோம். 

கிரேட் பிளேஸ் டு வேர்க்® சான்றிதழானது, ஊழியர்கள் மதிக்கப்படும் மற்றும் சிறந்து விளங்க ஊக்குவிக்கப்படும் ஒரு செழிப்பான பணியிடத்தை உருவாக்குவதற்கான டி-பிரிண்டின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது. இந்த மைல்கல் ஆனது நிறுவனத்தின் மக்கள் முன்னுரிமை அணுகுமுறையை உறுதிப்படுத்துவதுடன் மட்டுமல்லாமல், உலகளாவிய வாடிக்கையாளர்களுக்கு நம்பகமான பங்காளராக அதன் நிலையை வலுப்படுத்துகிறது.

Comments
0

MOST READ