Aug 27, 2025 - 11:48 AM -
0
இலங்கை மக்கள் அதிக அளவில் வீடொன்றை சொந்தமாக்கிக் கொள்வதற்கு வாய்ப்பளிக்கின்ற ஒரு மூலோபாய நகர்வாக, ஜோன் கீல்ஸ் புரொப்பட்டிஸ் நிர்மாணித்து வருகின்ற நவீன, புறநகர குடியிருப்புச் செயற்திட்டமான VIMAN Ja-Ela க்கான பிரத்தியேக, நிலையான வட்டி வீதம் கொண்ட வீட்டுக் கடன் தீர்வுகளை வழங்குவதற்காக, இலங்கையின் முன்னணி அரச நிதி நிறுவனமான இலங்கை வங்கியுடன் தான் கைகோர்த்துள்ளதாக ஜோன் கீல்ஸ் புரொப்பட்டிஸ் அறிவித்துள்ளது. வலுவான மாற்றங்களுக்கு உட்பட்டு வருகின்ற இன்றைய நிதிச் சூழலில், 10 ஆண்டுகளுக்கு கடனுக்கான மாதாந்த மீள்கொடுப்பனவுத் தொகையை முற்கூட்டியே தீர்மானித்துக் கொள்ளும் அரிய வாய்ப்பினை வீட்டு உரிமையாளர்களுக்கு இக் கூட்டாண்மை வழங்குகின்றது. மேலும், 10% முதற்கொண்டு ஆரம்பிக்கின்ற நிலையான விசேட வட்டி வீதத்தை VIMAN கொள்வனவாளர்களுக்கு இக்கூட்டாண்மை அறிமுகப்படுத்துகிறது.
ஜோன் கீல்ஸ் புரொப்பட்டிஸ் விற்பனைகள் மற்றும் சந்தைப்படுத்தல் தலைமை அதிகாரியும், ஜோன் கீல்ஸ் குழுமத்தின் துணைத் தலைவருமான நதீம் ஷம்ஸ் அவர்கள் இக்கூட்டாண்மை குறித்து கருத்து தெரிவிக்கையில்:
“நம்பிக்கை, பாரம்பரியம், மற்றும் தேசிய சேவை ஆகியவற்றுக்கு தனித்துவமாகப் பெயர் பெற்று விளங்கும் ஒரு நிறுவனமான இலங்கை வங்கியுடன் கைகோர்ப்பதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றோம். உண்மையான மக்களுக்கு உண்மையான மதிப்பையும், உண்மையான இல்லங்களையும் வழங்க வேண்டும் என் எமது வாக்குறுதிக்கு இக்கூட்டாண்மை மேலும் வலுச் சேர்க்கின்றது. நிலையான வட்டி வீதம் கொண்ட கடன் மூலமாக, இலங்கை மக்கள் தற்போது மன நிம்மதி மற்றும் நீண்ட கால பாதுகாப்புடன், அதிக அளவில் VIMAN Ja-Ela குடியிருப்பைச் சொந்தமாக்கிக் கொள்ள முடியும்.”
நாடெங்கிலும் ஆழமாக வேரூன்றியுள்ள இலங்கை வங்கி, நம்பகமான மற்றும் அனைவரையும் அரவணைக்கின்ற வங்கிச் சேவை தீர்வுகளுடன் குடிமக்களுக்கு வலுவூட்டுவதில் தொடர்ந்தும் முக்கிய பங்கு வகித்து வருகிறது. நிதியியல் ரீதியாக வலுவானது மாத்திரமன்றி, மக்களின் அபிலாஷைகளுக்கு உண்மையாக ஆதரவளிக்கின்ற வீட்டுக் கடன் தெரிவுகளை வழங்குவதில் வங்கி கொண்டுள்ள அர்ப்பணிப்பை இக்கூட்டாண்மை பிரதிபலிக்கிறது.
இலங்கை வங்கியின் அபிவிருத்தி வங்கிச் சேவை மற்றும் கிளை கடன் தொழிற்பாடுகள் வீச்சு 2 க்கான பிரதிப் பொது முகாமையாளர் என். ஜீவந்த அவர்கள் இது குறித்து கருத்து வெளியிடுகையில்:
“நீண்ட கால கட்டுபடி வசதி மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றை வழங்கும் வகையில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட நிலையான வட்டி வீதத்துடன் கூடிய வீட்டுக் கடன்களுடன் VIMAN Ja-Ela கொள்வனவாளர்களுக்கு எமது ஆதரவை நீட்டிப்பதையிட்டு நாம் பெருமகிழ்ச்சி அடைகின்றோம். இலங்கை மக்கள் அனைவரும் பாதுகாப்பான, நிலையான எதிர்காலத்தின் மீது முதலீடு செய்யும் வாய்ப்பினைப் பெற்றுக்கொள்ள உரித்துடையவர்கள் என்றும், அவர்களுடைய கனவின் அத்திவாரம் இல்லம் என்றும் இலங்கை வங்கி நம்புகின்றது. ஜோன் கீல்ஸ் புரொப்பட்டிஸ் போன்ற நன்மதிப்புடைய நிர்மாண நிறுவனமொன்றுடன் கைகோர்ப்பது, எமது வாடிக்கையாளர்கள் முக்கிய அடியொன்றை முன்னெடுத்து வைக்கும் தருணத்தில் அவர்களுக்கு மகத்தான உத்தரவாதத்தை அளிக்கின்றது.”
ஆறு ஏக்கர்களுக்கும் மேற்பட்ட விசாலமான நிலப்பரப்பில், 60% அளவிலான இடப்பரப்பு திறந்த வெளிகள் மற்றும் பச்சைப்பசேல் பின்னணிகளுக்கும் ஒதுக்கப்பட்ட வகையில் VIMAN Ja-Ela வதிவிட குடியிருப்பானது மிகவும் சிந்தனைபூர்வமாக திட்டமிடப்பட்டுள்ளது. வாழ்க்கைமுறை, சௌகரியம், மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றை இடைவிடாது இணைக்கின்ற வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள 418 அடுக்குமனைகளை இத்திட்டம் வழங்குகின்றது. துறைமுகத்திற்குச் செல்லும் அதிவேக நெடுஞ்சாலை, அத்தியாவசிய வசதிகள் போன்றவற்றுக்கான இலகுவான போக்குவரத்து இணைப்புடன், சிறுவர்களுக்கு விளையாட்டு வசதிக்கான இடம், பல்வேறு விளையாட்டுக்களுக்கான திடல்கள், சூரிய மின்வலு வசதியுடன் எரிசக்தித் திறன் கொண்ட இல்லங்கள் என பல்வேறு சிறப்பம்சங்களுடன் புறநகர் வாழ்வுக்கு VIMAN மீள்வரைவிலக்கணம் வகுக்கின்றது.
ஜோன் கீல்ஸ் புரொப்பட்டிஸ் மற்றும் இலங்கை வங்கி ஆகியன ஒன்றிணைந்து, நிதியியல் கடப்பாடு குறித்த தெளிவான அறிவை கொள்வனவாளர்கள் சிறப்பாகப் பயன்படுத்தி, அவர்கள் உண்மையான வீட்டுச் சூழலை அனுபவிக்கக்கூடிய வலுவான சமூகத்தின் மத்தியில் வாழ்வதை உறுதிப்படுத்தி, வீடொன்றை சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்ற கனவை நனவாக்குவதற்கு உதவுகின்றன.
VIMAN Ja-Ela குறித்த மேலதிக விபரங்கள் மற்றும் பிரத்தியேகமான கடன் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ள தயவு செய்து 0706 068 068 என்ற இலக்கத்தின் மூலமாக ஜோன் கீல்ஸ் புரொப்பட்டிஸ் நிறுவனத்தை தொடர்பு கொள்ளுங்கள்.