Aug 27, 2025 - 11:52 AM -
0
2025 இலங்கை தூய்மை எரிசக்தி வார விருதுகளில் பல கௌரவங்களைப் பெற்றதை அறிவிப்பதில் GAIA Greenenergy Holdings மகிழ்ச்சி அடைகிறது. Solar Quarter- South Asiaஆல் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மதிப்புமிக்க நிகழ்வு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் தலைமைத்துவம், புதுமை மற்றும் முன்னேற்றத்தைக் கொண்டாடுகிறது.
GAIA நிறுவனம் ஐந்து பிரிவுகளில் அங்கீகரிக்கப்பட்டது. அவற்றில் ஆண்டிற்கான சிறந்த நிறுவனம், கூரை மற்றும் விநியோகிக்கப்பட்ட சூரிய மின்சக்திக்கான வணிகச் சிறப்பு, நிலைத்தன்மை தலைமைத்துவத்திற்காக புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்களுடன் HSEயை ஒருங்கிணைத்து நிலைத்தன்மைத் தலைமைத்துவத்தில் சிறப்புத் திகழ்வு, பாதுகாப்பான சூரிய மின்சக்தி செயல்பாடுகளில் சேவைச் சிறப்பு ஆகிய விருதுகள் உள்ளடங்கும். மேலும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் சிறந்து விளங்கியமைக்காக தலைமை தொழில்நுட்ப அதிகாரி சதுர விதான கமகேவுக்கு Grand Masters (தனிநபர் தலைமைத்துவம்) விருதும், எரிசக்தியில் பெண்களுக்கான பிரிவில் வணிக மேம்பாட்டு முகாமையாளர் உதானி ஜயசிங்கவுக்கு WENERGY அங்கீகாரமும் வழங்கப்பட்டது.
GAIA Greenenergy Holdingsஇன் பிரதம நிறைவேற்று அதிகாரி லலிந்த கலுபோவில கருத்து தெரிவிக்கையில்: “இலங்கை தூய்மை எரிசக்தி வாரம் 2025இல் இந்த அங்கீகாரங்களைப் பெறுவதில் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். ஒவ்வொரு விருதும் பாதுகாப்பான மற்றும் நிலையான எரிசக்தி தீர்வுகளை வழங்குவதில் இருந்து புதுமை, செயல்பாட்டு சிறப்பம்சம் மற்றும் உள்வாங்கிய தலைமைத்துவத்தை வளர்ப்பது வரை எமது மக்களின் ஆர்வம், அர்ப்பணிப்பு மற்றும் விழுமியங்களின் பிரதிபலிப்பாகும். GAIAவில் ஒவ்வொரு மைல்கல்லும் எரிசக்தி சுதந்திரமான இலங்கையை கட்டியெழுப்புவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது. என்றார்.
GAIA Greenenergy Holdings, கூரை மற்றும் விநியோகிக்கப்பட்ட சூரிய மின்சக்தி மூலம் இலங்கையை எரிசக்தி சுதந்திரத்தை நோக்முன்னெடுத்து வருகிறது. ஏழு மாகாணங்களில் நாட்டின் மிகப்பெரிய 350 MW கூரை சூரிய மின்சக்தி திட்டத்தின் முதன்மை உருவாக்குநராக, GAIA நீண்டகால மதிப்பையும் அளவிடக்கூடிய சுற்றுச்சூழல் தாக்கத்தையும் வழங்குகிறது. ஏற்கனவே 77.6 MW நிறுவப்பட்ட நிலையில் நிறுவனம், ஆண்டுதோறும் 3.5 மில்லியன் மரங்களை நடுவதற்கு சமனான அளவு குறிப்பிடத்தக்க காபன் குறைப்புகளை அடைந்துள்ள அதே வேளை, கட்ட மீள்தன்மையை வலுப்படுத்துவதுடன் உயிர்ச்சுவட்டு எரிபொருள் மீதான சார்பையும் குறைத்துள்ளது.
தற்போது அதன் மூன்றாவது பதிப்பில் உள்ள இலங்கை தூய்மை எரிசக்தி வார விருதுகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் சிறந்து விளங்குவதைக் கொண்டாடும் வகையில் தொழில்துறை தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களை ஒன்றிணைத்தது. இந் நிகழ்வு, இலங்கைக்கு தூய்மையான, உறுதியான மற்றும் நிலையான எரிசக்தி எதிர்காலத்தை உருவாக்குவதில் GAIAஇன் தொடர்ச்சியான பங்களிப்புகளை பாராட்டுவதற்கான ஒரு சிறந்த தளத்தை வழங்கியது.