ஏனையவை
தேசிய மட்டத்திற்கு தெரிவான யருக்ஸன்

Aug 27, 2025 - 01:06 PM -

0

தேசிய மட்டத்திற்கு தெரிவான யருக்ஸன்

புத்தசாசன சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சு வருடந்தோறும் நடாத்துகின்ற கலாசார மத்திய நிலையங்களுக்கிடையிலான 'பிரதீபா' சித்திரப் போட்டியில் மட்/ பட்/ துறைநீலாவணை மகா வித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்வி கற்கும் மாணவன் உதயராசா யருக்ஸன் மாகாண மட்டத்தில் மூன்றாமிடம் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

இம்மாணவனுக்கான பயிற்சியை ஓவிய ஆசிரியரும் தேசிய கலைஞருமான கலைஞர் ஏ.ஓ. அனல் வழங்கியிருந்தார். 

மாகாண மட்டத்தில் முதல் 3 இடங்களைப் பெற்று, வெற்றிபெற்ற மாணவர்களுக்கான தேசிய மட்ட போட்டிகள் கடந்த 24 ஆம் திகதி கொழும்பு மஹர ஜனாதிபதி வித்தியாலயத்தில் நடைபெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05