Aug 27, 2025 - 01:23 PM -
0
Sri Lanka's The Biggest Abacus Based Mental Arithmetic Competition எனும் நாமத்தோடு UCMAS National Competition 2025 மிகவும் பிரமாண்டமான முறையில் கொழும்பு அலரி மாளிகையில் கடந்த ஆகஸ்ட் 23 ஆம் திகதி நடைபெற்றது.
இதில் UCMAS மனக் கணிதப் போட்டியில் திஹாரிய கிளையை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட 160 மாணவர்களில் 121 மாணவர்கள் விருதுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
Listening & Visual ஆகிய இரு பிரிவுகளின் கீழ் நடைபெற்ற இந்த தேசிய அளவிலான போட்டியில் நாடளாவிய ரீதியிலிருந்து சுமார் 2,510 மாணவர்கள் கலந்துகொண்டு தமது திறமைகளை வெளிக்காட்டினர். குறித்த நிகழ்வானது 8 நிமிடங்களில் அதிக மாணவர்கள் கலந்துகொண்ட போட்டியாகவும் சோழன் உலக சாதனை புத்தகத்தில் பதியப்பட்டு ஏனைய Abacus பாடத்திட்டங்களை முறியடித்துள்ளது.
இதற்கமைய 2025 ஆம் ஆண்டுக்கான UCMAS தேசிய போட்டியில் Visual A1 பிரிவில், கலந்துகொண்ட 7 வயது மாணவி Zafran Mohamed Zaina Maryam 'Grand Champion' விருதினை பெற்றுக்கொண்டார்.
அதேவேளை Listening Novice பிரிவில் திஹாரிய கிளையை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட Mohamed Illiyas Fathima Rahma 'Grand Champion' விருதினை பெற்றுக்கொண்டார்.
மேலும் திஹாரிய கிளையை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட மாணவர்களின் 3 சாம்பியன் விருதுகளும், 6 - 1st Runners-up விருதுகளும், 23 - 2nd Runners-up விருதுகளும், 06 - 3rd Runners-up விருதுகளும், 06 - 4th Runners-up விருதுகளும், 02 - 5th Runners-up விருதுகளும், 73 Merit விருதுகளும் கிடைக்கபெற்றமை குறிப்பிடத்தக்கது.
UCMAS இன் 6 finger technique பாடத்திட்டமானது உலகளவில் முன்னணி Abacus பாடத்திட்டமாகத் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.
முற்றிலும் பிரயோகமுறையிலமைந்துள்ள இப்பாடத்திட்டமானது பேராசிரியர் டினோ வொன்ங் அவர்களினால் தொடர்ச்சியான ஆராய்ச்சிகளுக்கு உட்படுத்தப்பட்டு முதலில் இரு விரல்களில் துவங்கி பின்னர் 4 ஆகவும் தற்போது 6 விரல்களைப் பயன்படுத்தி மாணவர்களின் மூளையின் அதிக பீடங்களை இயக்கக் கூடிய வகையில் UCMAS பாடத்திட்டம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் அதனை 10 விரல்களை உள்ளடக்கியதான பாடத்திட்டமாக மாற்றுவதற்கான ஆராய்ச்சிகள் அதன் ஸ்தாபகத்தலைவரால் முன்னெடுக்கப்பட்டுவருகிறது.