Aug 27, 2025 - 01:50 PM -
0
ஆகஸ்ட் 26, 2025 அன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவிக்கப்பட்டதன் பிரகாரம், EngEx 2025இன் Title partner ஆக SLT-MOBITEL இணைகிறது. பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தப் பொறியியல் கண்காட்சி, இலங்கையில் கடந்த 75 ஆண்டுகளாக பொறியியல் கல்வியின் சிறப்பையும் அதற்கு முக்கிய பங்காற்றிய பீடத்தின் பவள விழாவையும் குறிக்கிறது.
EngEx 2025 உடன் முதன் முறையாக SLT-MOBITEL இணைகின்றது. இதன் மூலம் இலங்கையில் பொறியியல் கல்வியை ஆதரிப்பதையும் அடுத்த தலைமுறை புத்தாக்க முயற்சியாளர்களை உருவாக்குவதற்கான SLT-MOBITEL இன் ஆழ்ந்த அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது. இலங்கையில் நடைபெறவுள்ள மாபெரும் பொறியியல் கண்காட்சி என எதிர்பார்க்கப்படும் EngEx 2025ஐ இந்தக் கைகோர்ப்பு மேலும் வலுப்படுத்துகிறது.
2025 செப்டம்பர் 23 முதல் 27 வரை பேராதனை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறவுள்ள ஐந்து நாள் கண்காட்சியில் புத்தாக்கம் மற்றும் எதிர்கால பொறியியல் திறமைகளை ஊக்குவிப்பதை நோக்காகக் கொண்ட தொழில்துறை தலைவர்கள், கல்வியாளர்கள், தொழில் வல்லுநர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என 50,000 இற்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
EngEx 2025, பொறியியல் பீடத்தின் அதிநவீன ஆராய்ச்சி மற்றும் புதுமையான திட்டங்களை காட்சிப்படுத்தும் அதே வேளை தொழில்துறை பங்குதாரர்கள் தமது சமீபத்திய தொழில்நுட்பங்கள், தயாரிப்புகள் மற்றும் சேவைகளைக் காட்சிப்படுத்த ஒரு பரந்த தளத்தை வழங்கும். மேலும் இக் கண்காட்சி, தொழில்துறைக்கும் கல்வித்துறைக்கும் இடையிலான தொடர்புகளை மேம்படுத்தி தேசிய வளர்ச்சியை ஊக்குவிப்பதையும் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் தொழில்களைத் தொடர இளைஞர்களை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டது.
இதில் பார்வையாளர்கள், பங்கேற்புக் காட்சிகள் (interactive display), நேரடி செயல் விளக்கங்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் மாணவர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடும் வாய்ப்புக்களை பெறுவர். இலங்கையில் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கான ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் அடுத்த தலைமுறையினர் பொறியியல் தொழில்களை தழுவுவதை ஊக்குவிக்கவும் இந் நிகழ்வு தூண்டுகோலாக அமையும்.
பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் லிலந்த சமரநாயக்க கருத்து தெரிவிக்கையில், “நிலையான மற்றும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட எதிர்காலத்தை வடிவமைப்பதில் பொறியியலின் தாக்கத்தை எடுத்துக்காட்டும் பல்வேறு வகையான அதிநவீன ஆராய்ச்சி, முன்னோடி கண்டுபிடிப்புகள் மற்றும் கூட்டுத் திட்டங்களை EngEx2025 காட்சிப்படுத்தும். மேலும், இக் கண்காட்சி அறிவுப் பரிமாற்றத்தை வளர்ப்பதுடன் எதிர்கால தலைமுறை பொறியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் கல்வித்துறை, தொழில்துறை, மாணவர்கள் மற்றும் பரந்த சமூகத்தினரின் பங்கேற்பிற்கான தளத்தையும் வழங்குகிறது. என்றார்.
இக் கண்காட்சி, பொறியியல் கண்டுபிடிப்புகளை முழுமையாக உள்ளடக்கிய பத்து சிறப்பு வலயங்களைக் கொண்டிருக்கும். அவை செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல் மற்றும் தரவு அறிவியல், உயிரியல் மருத்துவ பொறியியல் மற்றும் Mechatronics, மின்னணுவியல் மற்றும் உட்பொதிக்கப்பட்ட அமைப்புகள், Robotics, Automation மற்றும் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினியியல், ஆற்றல், சுற்றுச்சூழல் மற்றும் நிலைத்தன்மை மற்றும் இயற்கை சார்ந்த தொழில்நுட்பங்கள், Materials மற்றும் நனோ தொழில்நுட்பம், நவீன கட்டுமான தொழில்நுட்பங்கள், பொறியியல் சார்ந்த அறிவியல், பொழுதுபோக்கு மற்றும் கணிதம் மற்றும் ஒரு பிரத்தியேக தொழில்துறை வலயம் என்பவை ஆகும். SLT-MOBITEL வாகன முகாமைத்துவ (Fleet Management) அமைப்புகள், SLTravel தளம், Kaspersky மற்றும் Play Street தளங்கள் போன்ற டிஜிட்டல் தயாரிப்புகளுடன் அதிநவீன டிஜிட்டல் தீர்வுகளை காட்சிப்படுத்தும் ஒரு காட்சிக்
கூடத்தை EngEx 2025 இல் கொண்டிருக்கும். மொபிடல் 5G தொழில்நுட்பத்துடன் நிறுவனங்களுக்கான SLT- MOBITEL அடுத்த தலைமுறை வலையமைப்பு சேவைகளான SD-WAN மற்றும் Akaza Multi Cloud சேவைகள் உள்ளடக்கிய சேவைகளும் காட்சிப்படுத்தப்படும்.
பங்கேற்பு கூடம் நேரடி இணைப்பு அனுபவங்களுக்கான 5G gaming பகுதி, AR/VR மற்றும் AI செயல் விளக்கங்கள், மேலும் பரீட்சார்த்த 5G இணைப்பு மற்றும் FTTR தொழில்நுட்பத்தை சிறப்பிக்கும் broadband காட்சிப்படுத்தல்கள் உள்ளடங்கலாக பல அனுபவ வலயங்களைக் கொண்டிருக்கும். பார்வையாளர்கள் இந்தப் புதுமையான தொழில்நுட்பங்களை ஆராய்ந்து SLT-MOBITELஇன் பரந்த சேவைகள் எவ்வாறு தங்கள் வணிக செயல்பாடுகள் மற்றும் டிஜிட்டல் அனுபவங்களை எளிதாக்கும் என்பதைக் கண்டறியலாம்.
SLT-MOBITELஇன் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி Eng.பிரபாத் தஹநாயக்க கருத்து தெரிவிக்கையில், EngEx 2025 உடனான எங்கள் இணைவு, இலங்கையின் அடுத்த தலைமுறை பொறியாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களை ஊக்குவிப்பதில் SLT-MOBITELஇன் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது. தேசிய ICT தீர்வு வழங்குநராக, தேசிய முன்னேற்ற வளர்ச்சியில் பொறியியல் கண்டுபிடிப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன என நாங்கள் நம்புகிறோம். இக் கண்காட்சி தொழில்துறை, கல்வித்துறை மற்றும் இளம் திறமையாளர்களை ஒன்றிணைக்கும் ஒரு தனித்துவமான தளத்தை வழங்குவதுடன் நாடு டிஜிட்டல் ரீதியாக உள்வாங்கிய எதிர்காலத்திற்கு தேவையான திறன்கள் மற்றும் தொழில்நுட்பங்களைக் கொண்டிருப்பதை உறுதி செய்கிறது. இக் கண்காட்சிக்கான ஆதரவு, இலங்கையின் டிஜிட்டல் எதிர்காலத்தை மேம்படுத்துவதிலும் புதுமையான திறமைகளை வளர்ப்பதிலும் SLT-MOBITELஇன் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. என்றார்.
SLT-MOBITEL நிறுவனம், கல்வி முயற்சிகள் மற்றும் மாணவர் மேம்பாட்டுத் திட்டங்களை தொடர்ச்சியாக ஆதரிப்பதில் வெளிப்படுத்தி வரும் உறுதியான அர்ப்பணிப்பை அடிப்படையாகக் கொண்டு EngEx 2025 உடனான இணைவு அமைந்துள்ளது. தேசிய தகவல் தொழில்நுட்ப தீர்வு வழங்குநரான SLT-MOBITEL, கல்வி கற்றல் மற்றும் தொழில்துறை பயன்பாட்டிற்கு இடையிலான இடைவெளியை குறைக்கும் திட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்தும் ஆதரித்தும் வருகிறது. இதில் மாணவர்களுக்காக நிஜ உலக சவால்களை எதிர்கொள்ளவும் இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தை தூண்டவும் IoT அடிப்படையிலான தீர்வுகளை வடிவமைக்கும் SLIoT சவால், சிக்கலான பணிகளை முடிக்கும் திறன் கொண்ட autonomous ரோபோக்களை வடிவமைத்து உருவாக்கும் RoboGames மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் மாணவர்களுக்கு மதிப்புமிக்க நேரடி அனுபவத்தை வழங்கவுள்ள மிகவும் எதிர்பார்க்கப்படும் AI Expo ஆகியவை உள்ளடங்கும்.
நாட்டின் முன்னோடி பொறியியல் கல்வி நிறுவனமான பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடம் 1950ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது தேசிய வளர்ச்சிக்கும் உலகளாவிய முன்னேற்றத்திற்கும் பங்களிக்கும் சிறந்த பொறியாளர்களை பல தலைமுறைகளாக உருவாக்கி வருகிறது. ஆசிரியர்களின் சிறப்பான பாரம்பரியம், அதிநவீன ஆராய்ச்சி, தொழில்துறை கூட்டாண்மைகள் மற்றும் மாணவர் புத்தாக்கங்கள் ஆகியவற்றை பல தரப்பட்ட பார்வையாளர்களுக்கு காட்சிப்படுத்த EngEx 2025 ஒரு தளமாக செயல்படுகிறது.
மேலதிக விபரங்களுக்கு, https://engex2025.pdn.ac.lk/ஐப் பார்வையிடவும். செப்டம்பர் மாத தொடக்கம் முதல் நுழைவுச் சீட்டுக்களை onlineஇலும் நுழைவாயிலிலும் பெற்றுக் கொள்ளலாம்.