Aug 27, 2025 - 02:32 PM -
0
கண்டி நகரில் கஞ்சா போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த பிரதான சந்தேக நபர் 25 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.
கினிகத்தேன, அம்பகமுவ பகுதியில் 25 ஆம் திகதி காலை நாவலப்பிட்டிய – ரம்புக்பிடிய பகுதியை சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் 490 கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம், பிரதான சந்தேக நபரை கைது செய்வதற்கு கினிகத்தேன பொலிஸார் கண்டிக்கு சென்றனர்.
நபர் ஒருவர் ஊடாக கஞ்சா வாங்குவது போல திட்டம் வகுத்து, சந்தேக நபரை கண்டி புதிய வீதிக்கு வரவழைத்து கைது செய்தனர். அவர் வந்த வாகனம் சோதனைக்குட்படுத்தப்பட்டபோது அதற்குள் இருந்து 24 கஞ்சா பக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
40 வயதான சந்தேக நபர் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
--