உலகம்
பாடசாலையில் மாணவர்கள் தொலைபேசி பயன்படுத்த தடை

Aug 28, 2025 - 10:01 AM -

0

பாடசாலையில் மாணவர்கள் தொலைபேசி பயன்படுத்த தடை

தென் கொரியாவில் பாடசாலை மாணவ - மாணவிகள் இடையே தொலைபேசி பயன்பாடு அதிகரித்து வந்தது. இதனால் பாலியல் குற்றச் சம்பவங்கள், போதைப் பொருள் பயன்பாடு, ஆன்லைன் கேமிங் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் மாணவர்கள் சிக்கி அவர்களின் வாழ்க்கை சீரழிவதாக புகார் எழுந்தது.

 

பாடசாலையில் மாணவ - மாணவிகள் தொலைபேசி பயன்பாடுக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

 

இந்நிலையில் தென் கொரிய அதிபர் மூன் ஜே இங் பாடசாலையில் மாணவர்கள் தொலைபேசி பயன்படுத்த தடை விதிப்பதற்காக மசோதாவை நேற்று (27) பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்தார்.

 

இந்த மசோதாவுக்கு ஆளுங்கட்சியினர் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.கள் ஆதரவு தெரிவித்தனர். 
 

Comments
0

MOST READ
01
02
03
04
05