Aug 28, 2025 - 10:53 AM -
0
இந்திய சினிமாவே கொண்டாடும் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினியுடன், நாகர்ஜுனா, அமீர்கான், சத்யராஜ், சவுபின் சாஹிர், ஸ்ருதிஹாசன், உபேந்திரா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைப்பில் வெளியான இப்படம் பட்டிதொட்டி எங்கும் கலக்கி வருகிறது.
பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் முதல் நாளில் உலகளவில் 151 கோடி ரூபா வரை வசூலைக் குவித்தது.
3 நாட்களில் 300 கோடி ரூபா வசூலை வேகமாக கடந்த தமிழ் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றது. தற்போது ரஜினியின் கூலி புதிய மைல்கல்லை எட்டிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.