Aug 28, 2025 - 11:21 PM -
0
மலைய மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பற்றிக்கை சந்தித்து மலையக ஊடகவியலாளர்கள் கலந்துரையாடினர்.
பிரித்தானிய அரசாங்கமே மலையக மக்களை இலங்கைக்கு அழைத்துவந்தது எனவே ஏனைய நாடுகளைவிட பிரித்தானிய அரசாங்கம் மலையக மக்கள் விடயத்தில் கூடுதல் கரிசணை கொண்டிருக்க வேண்டும் என ஊடகவியலாளர்கள் உயர்ஸ்தானிகரிடம் வலியுறுத்தினார்கள். குறித்தச் சந்திப்பு நுவரெலியாவில் நேற்று (27) இடம்பெற்றது.
மலையகத்தை சேர்ந்த பிராந்திய ரீதியில் கடமையாற்றும் மற்றும் தலைநகரில் கடமையாற்றும் ஊடகவியலாளர்களின் பிரச்சினைகள் குறித்தும் உயர்ஸ்தானிகரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
மேலும், மலையக மக்கள் எதிர்நோக்கும் கல்வி, சுகாதாரம், காணி மற்றும் வீட்டு உரிமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விரிவாக இதன்போது எடுத்துரைக்கப்பட்டது.
இந்தச் சந்திப்பில், ஊடகவியலாளர்களான ஜே.ஏ.ஜோர்ஜ், பா.நிரோஸ்குமார், ராம் மற்றும் சதீஸ் ஆகிய பங்கேற்றிருந்தனர்.
மலைய மக்களின் பிரச்சினைகளை செவிமெடுத்த பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ ஆண்ட்ரூ பற்றிக்கிடம் மலையக தமிழ் ஊடகவியலாளர்கள் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.
--