Aug 29, 2025 - 04:14 PM -
0
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கண்டறியப்பட்ட மனித புதைகுழிகள் மற்றும் தமிழ் இனப்படுகொலைகளுக்கு நீதி கோரி, யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக (29) காலை கையெழுத்து இயக்கம் முன்னெடுக்கப்பட்டது.
செம்மணி உள்ளிட்ட இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கண்டறியப்பட்ட மனித புதைகுழிகளுக்கும், நடைபெற்ற தமிழ் இனப்படுகொலைகளுக்கும் சர்வதேச நீதி கோரி, தமிழ்த் தேசிய கட்சிகள் மற்றும் பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளில் கையெழுத்து சேகரிப்பு இயக்கம் இன்று (29) ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த வகையில், யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று நடைபெற்ற கையெழுத்து சேகரிப்பு நிகழ்வில் அனைத்து அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வை தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வராசா கஜேந்திரன், நடராசா சுகாஸ், சரவணபவன் சர்வேஸ்வரன், கஜதீபன் உள்ளிட்ட பலர் ஆரம்பித்து முன்னெடுத்தனர்.
--