செய்திகள்
சிம்பாப்வேவுக்கு 299 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

Aug 29, 2025 - 04:51 PM -

0

சிம்பாப்வேவுக்கு 299 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் சிம்பாப்வே அணிக்கு 299 என்ற வெற்றி இலக்கை இலங்கை அணி நிர்ணயித்துள்ளது. 

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற சிம்பாப்வே அணி இலங்கை அணியை துடுப்பெடுத்தாட பணித்தது. 

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 298 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது. 

இலங்கை அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஸ்ஸங்க அதிகபட்சமாக 76 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். 

அதேபோல், ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடிய ஜனித் லியனகே 70 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். 

கமிந்து மெந்திஸ் 57 ஓட்டங்களையும், குசல் மெந்திஸ் 38 ஓட்டங்களையும் மற்றும் சதீர சமரவிக்கிரம 35 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். 

பந்து வீச்சில் சிம்பாப்வே அணி சார்பில் ரிச்சர்ட் ங்காரவா அதிகபட்சமாக 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

Comments
0

MOST READ