Aug 29, 2025 - 05:06 PM -
0
செம்மணி உட்பட வடக்கு கிழக்கு மண்ணில் உள்ள மனிதப் புதைகுழிகளுக்கானதும் இனப் படுகொலைக்குமாக நீதிகோரி முல்லைத்தீவில் கையெழுத்து போராட்டம் ஒன்று இன்று (29) முன்னெடுக்கப்பட்டது.
செம்மணி உட்பட இலங்கையின் வடக்கு, கிழக்கு மண்ணில் இனங்காணப்பட்ட மனிதப் புதைகுழிகள் மற்றும் நடைபெற்ற தமிழ் இனப் படுகொலைகளுக்கும் நீதியைக் கோருவதற்காக தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கையெழுத்துச் சேகரிக்கும் செயற்பாடு வடக்கு, கிழக்க மாகாணங்களின் பல பகுதிகளிலும் இன்று இடம்பெற்றுவருகின்றது.
அந்த வகையில் குறித்த கையெழுத்துச் சேகரிக்கும் செயற்பாடு முல்லைத்தீவு நகரில் இன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில் இந்தக் கையெழுத்திடும் செயற்பாட்டில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், வட மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் சிவநேசன் (பவன்), கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் சின்னராசா லோகேஸ்வரன், மத தலைவர்கள், கரைதுறைப்பற்று பிரதேச சபை முன்னாள் தவிசாளர் கமலநாதன் விஜிந்தன், பிரதேசசபை உறுப்பினர்கள் தவராசா அமலன், தொம்மைப்பிள்ளை பவுள்ராஜ், மாந்தை கிழக்கு பிரதேசசபையின் உப தவிசாளர் வரதன், சமூக செயற்ப்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
--