Aug 29, 2025 - 06:14 PM -
0
பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிரான இரண்டு வழக்குகளை ஜனவரி 23 ஆம் திகதி மீண்டும் விசாரிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்குகள் இன்று (29) கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் அழைக்கப்பட்டன.
இதன்போது, விசாரணைகளின் முன்னேற்றத்தை ஜனவரி 23 ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு நீதவான் உத்தரவிட்டார்.
ஊவா மாகாண முதலமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், மாகாண சபைக்குச் சொந்தமான ஆறு நிலையான வைப்பு கணக்குகளை காலாவதியாகும் முன்பு ஒரு அரசு வங்கியில் இருந்து முறைகேடாக திரும்பப் பெற்றதன் மூலம் அரசாங்கத்திற்கு 1.73 பில்லியன் ரூபாய் நிதி இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராக இந்தப் முறைப்பாடுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.