Aug 29, 2025 - 07:32 PM -
0
செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வுப் பணிகள் கடந்த திங்கட்கிழமை தொடங்கிய நிலையில், இன்று (29) ஐந்தாவது நாளாக முன்னெடுக்கப்பட்டது.
இன்றைய தினம் 10 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டதுடன், மேலும் 10 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
நீதிமன்றம் இந்த அகழ்வுப் பணிகளுக்கு 45 நாட்கள் அனுமதி வழங்கியுள்ள நிலையில், இன்று 37ஆவது நாளாக பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இதுவரை 44 நாட்களில் மொத்தம் 174 எலும்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. மேலும் 187 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
--