Aug 30, 2025 - 10:15 AM -
0
நடிகர் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடித்து திரையரங்குகளில் படம் வெளியாகி நீண்ட இடைவெளி ஏற்பட்டுள்ளது.
அண்மையில் அவரது தம்பி ருத்ரா நடித்த ஓஹோ எந்தன் பேபி படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்தார்.
தற்போது அறிமுக இயக்குனர் பிரவீன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் 'ஆர்யன்' எனும் படத்தில் நடித்துள்ளார்.
இப்படம் பல மாதங்களாக தயாரிப்பில் உள்ளது. செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வாணி போஜன் ஆகியோர் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
இதற்கு சாம்.சி.எஸ் இசையமைக்கிறார். இதில் விஷ்ணு விஷால் பொலிஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
தற்போது இத்திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் 31ஆம் திகதி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது என அறிவித்துள்ளனர்.