Aug 30, 2025 - 12:17 PM -
0
இந்தியாவில் இருந்து நிலக்கடலை இறக்குமதிக்கு செய்வதற்கு இந்தோனேசியா தடை விதித்துள்ளது.
இந்திய நிலக்கடலையில் அதிக அளவு "அப்ளாடோக்சின்" (Aflatoxins) என்ற விஷப்பொருள் இருப்பதால் இந்த தடையை விதிப்பதாக இந்தோனேசியா அரசு தெரிவித்துள்ளது.
"அப்ளாடோக்சின்" புற்று நோயை உண்டாக்கும் இரசாயனமாகும்.
எதிர்வரும் செப்டம்பர் 3ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக இந்தோனேசிய தனிமைப்படுத்தல் அதிகார சபை (IQA) தெரிவித்துள்ளது.
இதனால் நிலக்கடலையை இறக்குமதி செய்யும் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஏற்கனவே இந்திய பொருட்களுக்கு 50 சதவீத இறக்குமதி வரியை விதித்துள்ளார்.
அத்துடன் நிலக்கடலைக்கும் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளதால் இந்திய வர்த்தகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.